வருகிறது காலாவதி தேதிகளின் மீது நடவடிக்கை..

 
Published : Jul 01, 2017, 04:39 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
வருகிறது காலாவதி தேதிகளின் மீது நடவடிக்கை..

சுருக்கம்

Action on the expiry date

சென்னையில் பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பொருட்களுக்கான பாக்கெட்டுகள் மீது காலாவதி தேதியை அச்சடிப்பதற்கு கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து  உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இப்பிரச்சனை குறித்து பல விதமான  கருத்துகள் வெளிவந்துள்ளன.

சில அதிர்ச்சிகரமான புகைப்படங்களும் வெளிவந்துள்ளன. ஏற்கனவே விற்பனைக்கு வந்து வாடிக்கையாளர்கள் வாங்கி சென்ற பொருட்கள் அடுத்த சில நாட்களுக்கு பின் தயாரித்தது போன்று தேதிகள் அச்சிடப்பட்டிருக்கும். உணவுப் பொருட்கள் தாயாரித்த தேதிகள் அச்சிடுவது குறித்து மோசடிகள் நடந்துள்ளன. 

பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பொருட்களின் பாக்கெட்டுகள் மீது காலாவதி தேதியை மாற்றி மீண்டும் விற்பனை செய்யும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதனால் பொது மக்கள் அச்சம் அடைய ஆரம்பித்துள்ளனர்.

தாமதிக்காமல் பயன்படுத்தும் உணவு பொருட்களில் கூட காலாவதி தேதியை அதன் தயாரிப்பு நிறுவனங்கள் நீட்டி கொண்டே செல்வதால், மக்களுக்கு அதன் நம்பக தன்மை குறைந்து வருகிறது. அவற்றை தர நிர்ணயம் செய்து,உண்மையான தேதியை வழங்க உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை வேண்டும் என கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

தயிர், பாலுக்கு 15நாள் வரை முடிவு தேதி. மசாலா பொருட்களுக்கு ஓராண்டு கழித்து முடிவு தேதி. ரெடிமேட் சப்பாத்தி, ரெடிமேட் புரோட்டோ, சிக்கன், ரெடிமேட் நூடுல்ஸ் என பலவகை உணவு பொருட்களுக்கு 20 நாள் முதல் ஒரு மாதம் வரை காலாவதி முடிவு தேதி நீட்டிப்பு. சூடாக சாப்பிட்டு வந்த நாம், சுவையாக சாப்பிட ஆரம்பித்தால் அதன் தரம் பற்றி சிந்திக்க மறந்துவிட்டோம்.

எந்த அளவு ஒரு பொருளின் காலாவதி தேதி நீட்டிக்கப்படுகிறதோ, அந்த அளவு அதன் ரசாயன கலவை அதிகரிக்கும், என்பது எழுதப்படாத விதி. வாந்தி எடுத்து,வாழ்க்கையை தொலைத்த பிறகு தான் உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்கிறது.

இதனால் சென்னையில் 200 மேற்பட்ட கடைகள், நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

பாக்கெட்டின் வெளிப்பகுதியில் மக்களின் பார்வைக்கு தெளிவாக தெரியும் வகையில்தான் காலாவதி தேதி பிரின்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டது.

இதற்காக ஜூன் 30ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாக்கெட்டுகளில் காலாவதி தேதியை அச்சடிக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என்று பல்பொருள் அங்காடிகள் தரப்பில் இருந்து உணவுப்பாதுகாப்புத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல்பொருள் அங்காடிகளின் கோரிக்கையை ஏற்று காலக்கெடுவை மேலும் நீட்டிக்க உணவுப்பாதுகாப்புத் துறையினர் முடிவு செய்துள்ளது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Investment: முதியோர் பணத்தை ஏப்பம் விடும் குட்டி குட்டி தவறுகள்.! 7 விஷயங்களை தவிர்த்தால் சேமிப்பு கரையாது.!
Business: வருங்காலத்துல இந்தியாவில் பவர்கட்டே இருக்காதாம்.! ஏன் தெரியுமா.?