ரூ.61 ஆயிரம் கோடிக்கு வருவாயைகுறைத்து காண்பித்த 6 செல்போன் நிறுவனங்கள்…. சிஏஜி அறிக்கையில் பகீர் தகவல்

 
Published : Jul 21, 2017, 10:21 PM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
ரூ.61 ஆயிரம் கோடிக்கு வருவாயைகுறைத்து காண்பித்த 6 செல்போன் நிறுவனங்கள்…. சிஏஜி அறிக்கையில் பகீர் தகவல்

சுருக்கம்

6 cell phone companies punished

பார்தி ஏர்டெல், வோடபோன், ஐடியா உட்பட 6 தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் 2010-11 மற்றும் 2014-15 ஆண்டுகளில் ரூ.61 ஆயிரம் கோடிக்கு அதிகமாக தங்கள் வருவாயைக் குறைத்துக் காட்டியுள்ளதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த நிறுவனங்கள் வருவாயை குறைத்து காண்பித்ததால், அரசுக்கு ரூ.7 ஆயிரத்து 697.6 கோடி வருவாய் குறைந்துள்ளது நாடாளுமன்றத்தில் நேற்று சமர்பிக்கப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா, ஐடியா செல்லுலார், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல் ஆகிய இந்த 5 நிறுவனங்களுக்கான தணிக்கை ஆண்டுக் காலம் 2010-11 முதல் 2014-15 வரை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாறாக, சிஸ்டிமா ஷியாம் நிறுவனத்திற்கான தணிக்கை ஆண்டு 2006-07 முதல் 2014-15வரையாகும்.

ஏர்டெல் நிறுவனம் அரசுக்கு லைசன்ஸ் கட்டணம்  ஸ்பெக்ட்ரம் பயன்படுத்திய கட்டணம் 2010-11 முதல் 2014-15ம் ஆண்டுவரை என 
ரூ.2 ஆயிரத்து 602 கோடி நிலுவையாக உள்ளது. இதற்கு வட்டியாக ரூ.1.245.91 கோடி உள்ளது.

வோடபோன் நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையாக ரூ.3 ஆயிரத்து 331.79 கோடியும், வட்டியாக ரூ.1,178.84 கோடியாகும்.  ஐடியா நிறுவனம் ரூ.1,136.29 கோடியும், வட்டியாக ரூ.657.88 கோடியும் செலுத்த வேண்டும்.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் ரூ.1,911.17 கோடியும், ஏர்செல் நிறுவனம் ரூ.1,222.65 கோடியும், எஸ்.எஸ்.டி.எல் ரூ.116.71 கோடியும் நிலுவை உள்ளது. இந்தக் குறைந்த வருவாய் காட்டலினால் அரசுக்குச் சேர வேண்டிய தொகையில் ரூ.7,697.62 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.

 

 


 

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Investment: முதியோர் பணத்தை ஏப்பம் விடும் குட்டி குட்டி தவறுகள்.! 7 விஷயங்களை தவிர்த்தால் சேமிப்பு கரையாது.!
Business: வருங்காலத்துல இந்தியாவில் பவர்கட்டே இருக்காதாம்.! ஏன் தெரியுமா.?