ஏடிஎம் இயந்திரத்திலேயே லோன் வாங்கலாம்... ஐசிஐசிஐ-ன் புது திட்டம்

 
Published : Jul 21, 2017, 11:25 AM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
ஏடிஎம் இயந்திரத்திலேயே லோன் வாங்கலாம்... ஐசிஐசிஐ-ன் புது திட்டம்

சுருக்கம்

Loan can be purchased at ATM machine

வங்கிகளில் கடன் வாங்க வாடிக்கையாளர்கள் வங்கிக்குச் சென்று அது குறித்து மேனேஜரிடம் ஒப்புதல் வாங்கிய பிறகே லோன் வாங்க ஒப்புதல் கிடைக்கிறது. ஆனால், தனியார் வங்கியான ஐசிஐசிஐ, ஏடிஎம் இயந்திரம் மூலமாகவே கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஐசிஐசிஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களில் தகுதியானவர்களை கிரெடிட் அனாலிசிஸ் நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்து, அவர்களுக்கு ஏ.டி.எம். இயந்திரம் மூலமாகவே 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.  ஐந்து வருடத்துக்கான தனிநபர் கடன்களை வழங்கும் திட்டத்தை ஐசிஐசிஐ தொடங்கியுள்ளது.

வாடிக்கையாளர்கள், ஏடிஎம் இநய்திரங்களிலேயே தனிநபர் கடனுக்கான விண்ணப்பத்தில் கேட்கப்படும் விவரங்களைப் பதிவு செய்து முடித்தால், உங்களுடைய கடன் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

வட்டி விகிதம் எவ்வளவு, பிராசசிங் கட்டணம் எவ்வளவு ஆகிய விவரங்கள், ஏடிஎம் இயந்திர திரையில் காண்பிக்கப்படும். டிரான்சாக்சனின்போது, அனைத்து விவரங்களையும் தெளிவாகப் படித்து கடன் தேவைப்படுவர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

இன்சூரன்ஸ் துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றம்!
அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கும் SHANTI மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!