
சேமிப்பு கணக்கு தொடங்க 50 ரூபாய் மட்டுமே....! அதிர்ஷ்ட வாய்ப்பு ....
வங்கியில் சேமிப்பு கணக்கை வைத்திருப்பவர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது . இந்நிலையில் வெறும் 50 ரூபாயில் சேமிப்பு கணக்கை போஸ்ட் ஆபிஸில் தொடங்கலாம் .
அதுமட்டுமில்லாமல், இருப்புத்தொகையாக 500 ரூபாய் வைத்துகொள்ளலாம். மேலும் செக் புக்கையும் வாங்கிக் கொள்ள முடியும். நாம் வைத்திருக்கும் தொகைக்கு 4 சதவீதம் ஆண்டு வருமானமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .
இதில் என்ன சிறப்பம்சங்கள் என்பதை பார்க்கலாம்
கட்டணமில்லாமல் ஏடிஎம் கார்டு பெறலாம்
வரைமுறையின்றி பணத்தை எத்தனை முறை வேண்டுமென்றாலும் போஸ்ட் ஆபீஸில் உள்ள ஏடிஎம்மில் எடுத்துக் கொள்ளலாம்
எந்த போஸ்ட் ஆபிஸிலும் அடையாள அட்டை காட்டி, பணம் பெற்றுக்கொள்ளவோ, டெபாசிட் செய்யவோ முடியும் என்பது கூடுதல் தகவல்
எப்படி சாத்தியம் ?
உதாரணமாக நமக்கு தெரிந்தவர் கணக்கில் வேலூரில் பணம் செலுத்தினால், கோவை மாவட்டத்தில் உள்ள கிராமத்து தபால் நிலையத்தில் கூட பணத்தை பெற்றுக் கொள்ளலாம்
அவசரகாலக் கட்டத்தில் எந்த வங்கி ஏடிஎம்மிலும் பணம் எடுக்கலாம்.
இதனை தொடர்ந்து, பண பரிவர்த்தனைக்காக விரைவில் அனைத்து போஸ்ட்மேன்களுக்கும் டிஜிட்டல் கருவிகள் வழங்கும் திட்டம் உள்ளதாகவும், அதன் மூலம் சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, போன்ற வசதிகள் ஏற்படுத்தி தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் ஏடிஎம்மிலிருந்து பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் இருக்கும் சமயத்தில், பாமர மக்கள் எளிதில் சிறந்த சேவையை பெறுவதற்கு போஸ்ட்ஆபிஸின் இந்த வாய்ப்பு கண்டிப்பாக மக்களிடேயே நல்ல வரவேற்பை பெரும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.