
16 மாதங்களில் இல்லாத அளவிற்கு, ரூபாயின் மதிப்பு உயர்வு
நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலியால், இந்திய பங்குவர்த்தகம் நேற்று ஏற்றம் கண்டது . இதன் தொடர்ச்சியாக கடந்த16 மாதங்களில் இல்லாத அளவிற்கு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது
அதன்படி, நேற்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78 பைசா உயர்ந்தது. இதற்கு முன்னதாக 2015-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும், நேற்றைய வர்த்தக நேர முடிவில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78 பைசா உயர்ந்து 65.82 ரூபாயாக உயர்வு பெற்றது.
ஆசியா பகுதியிலேயே சிறப்பாக செயல்படும் மூன்றாவது கரன்ஸி ரூபாய் இந்திய ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது .
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.