
பாரத ஸ்டேட் வங்கியுடன் 5 துணை வங்கிகள் இணைப்பு ...
வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல், பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகள் இணைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
5 துணை வங்கிகள்
பாரத ஸ்டேட் வங்கியுடன், அதன் 5 துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் ஆகிய வங்கிகள் இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மகிலா வங்கியும் இணைப்பு
பாரத ஸ்டேட் வங்கியுடன், மகிளா வங்கி இணைக்கவும் திட்டமிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இருந்த போதிலும் , இதுவரை அதிகார பூர்வ தகவல் வெளியாகவில்லை.இந்நிலையில், 5 துணை வங்கிகளும் ஏப்ரல் 1ம் தேதி முதல் எஸ்பிஐயுடன் இணைக்கப்படும் என்று , எஸ்பிஐ சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.