
கிஷோர் பாஜியவாலா என்ற , சூரத்தை சேர்ந்த பைனான்சியர் கிஷோர் பாஜியவாலாவிடமிருந்து, ரூ.1.02 கோடி மதிப்புள்ள புதிய நோட்டுகளை அமலாக்கத்துறை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவருக்கு சொந்தமான பல இடங்களில் தொடர்ந்து சோதனை நடைப்பெற்று வருகிறது.குறிப்பாக பாஜி யவாலா மற்றும் அவரது மகன்கள் ஜிக்னேஷ் மற்றும் விலாஷ் ஆகியோர் மீது அமலாக்கத்துறை எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
வங்கி அதிகாரிகள் துணை
கணக்கில் வராத அதிக அளவிலான பணத்தை வங்கி அதிகாரிகள் துணையுடன், இந்த செயலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.தொடர்ந்து சோதனை நடத்திய போது, அவரது வீடு, கடை மற்றும் வங்கி லாக்கர் உள்ளிட்ட பலவற்றில் இருந்து 1.02 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் பாஜிய வாலா மகன் ஜிக்னேஷை அமலாக் கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றபட்ட நகைகளின் மதிப்பு :
பாஜியவாலாவுக்குச் சொந்தமான ரூ.1.49 கோடி மதிப்புள்ள தங்க கட்டி, ரூ.4.92 கோடி மதிப்புள்ள தங்க நகை கள், ரூ.1.45 கோடி ரூபாய் நோட்டு கள், ரூ. 1.28 கோடி மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் என இவை அனைத்தையும் அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.