பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், 42% குடும்பத்தார் விருப்பச்செலவுகளை ரத்து செய்யலாம்: ஆய்வில் தகவல்

By Pothy RajFirst Published Feb 26, 2022, 6:40 PM IST
Highlights

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் தங்களுடைய விருப்பச்செலவுகளை குறைத்துவிடுவோம் என்று லோக்கல் சர்க்கில் எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் பங்கேற்ற குடும்பத்தினரில் 42 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் தங்களுடைய விருப்பச்செலவுகளை குறைத்துவிடுவோம் என்று லோக்கல் சர்க்கில் எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் பங்கேற்ற குடும்பத்தினரில் 42 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் 2022ம்ஆண்டில் தங்களின் வருமானமும், சேமிப்பும் குறையும் எனவும் தெரிவித்துள்ளனர். 

பெட்ரோல் லிட்டர் ரூ.110ஆகவும், டீசல் லிட்டர் ரூ.100 வரையிலும் தற்போது விற்பனையாகி வருகிறது. உக்ரைன் ரஷ்யா பிரச்சினையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 105 டாலராக அதிகரித்துள்ளது. 5 மாநிலத் தேர்தல் முடிந்தபின் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் உயர்வு நாட்டில் மக்களை எவ்வாறு பாதிக்கும், எந்த அளவு விலை உயர்வை தாங்கிக்கொள்வார்கள், சேமிப்பு, செலவு குறைப்பு உள்ளிட்டவை குறித்து லோக்கல் சர்க்கில் எனும் சந்தை ஆய்வு நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் நாட்டில் 361 மாவட்டங்களைச் சேர்ந்த 27ஆயிரம் பேர் பங்கேற்றனர்.  இதில் 66 சதவீதம் பேர் ஆண்கள், 34 சதவீதம் பேர் பெண்கள்.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் அதாவது 2 குடும்பத்தாரில் ஒருவர் 2022ம் ஆண்டில் தங்களின் சேமிப்பு குறையும் எனத் தெரிவித்துள்ளனர். 11 சதவீதம்பேர் மட்டுமே வருமானம் உயரும் எனத் தெரிவித்துள்ளனர். 6 சதவீதம் பேர் தங்களின் சேமிப்பு 25% உயரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

42 சதவீதம்பேர் பெட்ரோல், டீசலில் விலை உயர்வை தாங்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர். 24 சதவீதம் பேர், தங்களின் விருப்பச்செலவுகளை ஏற்கெனவே குறைத்துவிட்டோம், பெட்ரோல்,டீசல் விலை உயர்வு இருந்தால் முழுமையாக ரத்து செய்துவிடுவோம் எனத் தெரிவித்தனர்.
22 சதவீதம் பேர் குறுகியகாலத்துக்கு மட்டும் விலை உயர்வைத் தாங்க முடியும் என்றும்,  9 சதவீதம் பேர் 20 சதவீதம் மட்டும் விலை உயரலாம் என்ரும், 7 சதவீதம் பேர் 10 சதவீதம் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.16 சதவீதம் பேர் 5 சதவீதம் மட்டும் விலை உயர்ந்தால் போதுமானது எனத் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று, எதிர்காலத்தில் வேறு பெருந்தொற்றுகள் வரும் என்ற அச்சம், பணவீக்கம், விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை உயர்வால் அடுத்தடுத்து  பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் 2022ம் ஆண்டில் தங்களின் வருமானம் மற்றும் சேமிப்பு குறையும் என 2 பேரில் ஒருவர் தெரிவித்துள்ளனர்
 

click me!