செல்வ மகள் சேமிப்புத் திட்டம் vs காப்பீடுத் திட்டங்கள்: உங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்கு எது சிறந்தது

By Pothy RajFirst Published Feb 26, 2022, 5:38 PM IST
Highlights

தங்கமகள் சேமிப்புத் திட்டம்(சுகன்யா சம்ரிதி யோஜனா), குழந்தை காப்பீடுத் திட்டங்கள் இதில் குழந்தையின் எதிர்காலத்துக்கு எது சிறந்ததாகஇருக்கும் என்பதை இந்த செய்தி விளக்குகிறது

செல்வ கமகள் சேமிப்புத் திட்டம்(சுகன்யா சம்ரிதி யோஜனா), குழந்தை காப்பீடுத் திட்டங்கள் இதில் குழந்தையின் எதிர்காலத்துக்கு எது சிறந்ததாகஇருக்கும் என்பதை இந்த செய்தி விளக்குகிறது

குழந்தைகளுக்கு சிறந்த கல்வியைக் கொடுக்க வேண்டிய அக்கறை பெற்றோருக்குஇருக்கிறது. ஆனால், கல்வித்துறையில் அதிகரித்துவரும் பணவீக்கம் பெற்றோருக்கு மேலும் கவலையை ஏற்படுத்துகிறது. குழந்தைகளின் எதிர்காலத்துக்கு எப்போதும் ஒரு தொகையை பெற்றோர் ஒதுக்கி வைக்க வேண்டிய நிலையில் உள்ளனர்

குழந்தைகளின் கல்வி தவிர்த்து, திருமணம், வீடு உள்ளிட்ட பல்வேறு நிதி தொடர்பான இலக்குகள் ஆகியவற்றுக்கு முறையான திட்டமிடல், முதலீடு அவசியமாகும். கனவுகளை நினவாக்க, நிதிப்பாதுகாப்பு என்பது அவசியமானது, முக்கியமானது, இலக்குகளை அடையவும் இவை முக்கியமானது. துரதிர்ஷ்டமாக பெற்றோரில் யாராவது ஒருவரை இழக்க நேரும்போது காப்பீடுத் திட்டங்கள், சேமிப்புத் திட்டங்கள், எதிர்கால சேமிப்புத் திட்டங்கள் கைகொடுக்கும்.

அந்த வகையில் குழந்தையின் எதிர்காலத்துக்கு நாம் சிறந்த சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம் .அதில் முக்கியமானது பெண் குழந்தைக்கான செல்வ மகள் சேமிப்புத்திட்டம், குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே உருவாக்கப்பட்ட சேமிப்புத்திட்டங்கள்.

சுகன்யா சம்ரிதி திட்டம்

சுகன்யா சம்ரிதி திட்டம் என்பது பெண் குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்டது. இந்திய அஞ்சல் துறையின் சார்பில், ‘செல்வமகள் சேமிப்பு திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதிகபட்சம் 2 பெண் குழந்தைகள் என்ற அடிப்படையில் 10 வயதுக்குஉட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

இதில் கணக்கைத் தொடங்க குறைந்தபட்சம் ரூ.250 செலுத்த வேண்டும். மேலும் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.250, அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை வைப்பு தொகை செலுத்தலாம். சேமிக்கும் தொகைக்கு ஆண்டுக்கு 8 சதவீதம் வரை வட்டி பெறலாம்.

பலன்கள்
தங்கமகள் சேமிப்புத் திட்டம் பாதுகாப்பானது, பிபிஎப் திட்டத்துக்கு அடுத்தபடியாக 7.6 சதவீதம் வரை வட்டிவழங்கும் திட்டமாகும். குழந்தைக்கு 21வயதாகும்போது திட்டம் முதிர்ச்சியடையும். குழந்தைக்கு 15வயது வரும்போது டெபாசிட் செய்வதை நிறுத்தவிட வேண்டும். இந்தத் திட்டத்தில் 50 சதவீதத் தொகையை குழந்தையின் கல்லூரிப்படிப்புக்கும், 21வயது முடிந்தபின் மீதமிருக்கும் தொகையை குழந்தையின் திருமணத்துக்கும் எடுக்கலாம். இந்தத்திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமானவரி 80சின்படி வரிச்சலுகை உண்டு

இந்தத் திட்டம் பெண் குழந்தைகளுக்கு மட்டுமானது. இந்தத்திட்டத்துக்கான வட்டி காலாண்டுக்குஒருமுறை கணக்கிடப்படும். ரிசர்வ் வங்கியின் வட்டிக்குறைப்பின்போது, வட்டியின் அளவும் குறையக்கூடும்

குழந்தைகளுக்கான காப்பீடு திட்டங்கள்

சுகன்யா சும்ருதி திட்டத்தைப் போல் குழந்தையின் எதிர்காலத்துக்காக காப்பீடுத் திட்டங்கள் ஏராளமாக உள்ளன.உயர்கல்வி, திருமணம் ஆகியவற்றுக்காகவே தனித்தனித்திட்டங்கள் உள்ளன. 

குழந்தை காப்பீடுத் திட்டங்கள் பெரும்பாலும் ப்ரீமியம் தள்ளுபடி பலன்கள் கிடைக்கும். அதாவது குழந்தையின் பெயரில் பாலிசி எடுத்து தொடர்ந்துசெலுத்திவரும்போது பெற்றோர் உயிரிழக்கநேர்ந்தாலும் பாலிசி தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும், ப்ரீமியம் தொகை செலுத்தத் தேவையில்லை. இதுபோன்ற திட்டங்கள் பெண் , ஆண்குழந்தளுக்கும் இருக்கிறது

காப்பீடு திட்டங்களின் முதிர்வுகாலத்தின் அடிப்படையில் தேவைக்கு ஏற்ப பெற்றோர் தேர்வு செய்யலாம். சில நேரங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பணம்பெறும் (மணிபேக்மோட்) இருந்தாலும் அதைத் தேர்வு செய்யலாம். தங்கமகள் சேமிப்புத் திட்டத்தைப் போல்இந்த திட்டத்திலும் செய்யப்படும் முதலீட்டுக்கும் வருமானவரிச்சலுகை 80சியின் கீழ் உண்டு

எந்த திட்டம் உகந்தது.
அதிகமான வட்டி, ரிஸ்க்ப்ரீ, வரிச்சலுகை, நீண்டகாலப் பலன், பெண் குழந்தையின் நலன் ஆகியவற்றைப் பார்க்கும்போது சுகன்யா சம்ருதி திட்டம் சிறந்தது என காப்பீடுத்துறை வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள். தங்கமகள் சேமிப்புத் திட்டத்தில் ஒரு குழந்தைக்கு சேமித்துவரும்போது, திடீரெனபெற்றோர் இறந்து, சேமிப்பு தொடர முடியாத சூழல் ஏற்படும். அதைத்தவிர்க்க கூடுதலாக குழந்தைக்கான காப்பீடு திட்டத்தையும் எடுத்துக்கொள்வது சிறந்தது.


 

click me!