
வெறும் ரூ.13க்கு மூன்று வேளை சாப்பாடு அளிக்கும் திட்டத்தை புதியதாக பதவி ஏற்ற உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிமுகப்படுத்தியுள்ளார்.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி ஏற்ற பிறகு, பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது . இதனை தொடர்ந்து தற்போது, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.13க்கு மூன்று வேளை உணவு அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் ‘அன்னபூர்ணா கேண்டீன்’ என்ற பெயரில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் தான் , காலை உணவு ரூ.3-க்கும், மதியம் மற்றும் இரவு உணவு தலா ரூ. 5-க்கும் என மொத்தம் 3 வேளையும் ரூ.13-க்கு வழங்கப்பட உள்ளது .
தொடக்கத்தில், மாநிலம் முழுவதும் 14 மாநகராட்சி பகுதிகளில் அன்னபூர்ணா கேன்டீன் தொடங்கப்படும் என்றும் , முதற்கட்டமாக லக்னோ, கான்பூர், கோரக்பூர், காசியாபாத் உள்ளிட்ட நகரங்களில் தொடங்கப் பட உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
காலை வேளை உணவு
காலையில் டீயுடன், இட்லி, சாம்பார், பருப்பு, பக்கோடா, கச்சோரி ஆகியவையும்,
மதியம் மற்றும் இரவு - 6 சப்பாத்திகள், காய்கறி, பருப்பு சால்னா ஆகியவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது
இந்த வசதியால் பொதுமக்கள் அதிகம் பயன்பெறுவர். வேலைவாய்ப்புகள் உருவாகும். வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் வயிராற 3 வேளை உணவு உண்பர் . ஆதலால் யோகி ஆதித்யாநாத்தின் பல திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.