Honda CBR 650R price : 2022 CBR650R மாடலை அறிமுகம்  செய்த ஹோண்டா

Nandhini Subramanian   | Asianet News
Published : Jan 26, 2022, 10:37 AM IST
Honda CBR 650R price : 2022 CBR650R மாடலை அறிமுகம்  செய்த ஹோண்டா

சுருக்கம்

ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் 2022 CBR650R மாடலை அறிமுகம் செய்தது.

ஹோண்டா நிறுவனம் 2022 CBR650R மிடில்-வெயிட் ஸ்போர்ட்ஸ் டூரர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2022 ஹோண்டா CBR650R விலை ரூ. 9.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 47 ஆயிரம் அதிகம் ஆகும். 

2022 ஹோண்டா CBR650R மாடல் கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் மற்றும் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் கிராஃபிக்ஸ் சற்றே மாற்றப்பட்டு இருக்கிறது. இவைதவிர புதிய மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 

புதிய CBR650R மாடலிலும் 648.72சிசி, லிக்விட் கூல்டு, இன்லைன் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 85.82 பி.ஹெச்.பி. திறன், 57.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. 211 கிலோ எடை கொண்டிருக்கும் புதிய CBR650R மாடலில் 15.4 லிட்டர் பெட்ரோல் டேன்க் உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை ஃபுல் எலல்.இ.டி. லைட்டிங், எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., ஹோண்டா செலக்டபில் டார்க் கண்ட்ரோல், ஹோண்டா இக்னிஷன் செக்யூரிட்டி சிஸ்டம், எமர்ஜன்சி ஸ்டாப் சிக்னல் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

இந்த மோட்டார்சைக்கிள் CKD முறையில் கிடைக்கிறது. இது ஹோண்டாவின் பிரீமியம் பிக்-விங் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் 2022 ஹோண்டா CBR650R மோட்டார்சைக்கிள் கவாசகி நின்ஜா 650 மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ரூ.1 லட்சம் கோடி இருக்கு! உங்கள் பணம்.. மீட்டுக்கொள்ளுங்கள் என பிரதமர் மோடி அறிவிப்பு.. அடேங்கப்பா!
Gold Rate Today (December 11) : தங்கத்துடன் சேர்ந்து வெள்ளி விலையும் உயர்வு.! எப்போது வாங்கலாம்?