GOLD RATE TODAY : அம்மாடியோவ்..!! தங்க விலை இவ்வளவா..? இன்றைய தங்கம் & வெள்ளி விலை..

By Raghupati RFirst Published Jan 26, 2022, 8:32 AM IST
Highlights

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் தங்க விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், இன்று அதிகரித்து உள்ளது.

தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து வருகிறது. இன்றைய விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,603 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,583 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,664  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 160 ரூபாய் அதிகரித்து 36,824 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.68.40 ஆக குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.400 குறைந்து  68,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

click me!