Ola electric car : டீசர் அப்டேட் - ஓலா எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் வெளியீடு

By Nandhini SubramanianFirst Published Jan 25, 2022, 6:02 PM IST
Highlights

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை வினியோகம் செய்து வருகிறது. சில தாமதங்கள் ஆனாலும், ஸ்கூட்டர்கள் தொடர்ந்து வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் புதிய ஓலா எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறார். 

இதுபற்றிய அறிவிப்பு பாவிஷ் அகர்வால் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதில் எலெக்ட்ரிக் கார் தோற்றம் எப்படி இருக்கும் என தெரியவந்துள்ளது. ஓலா எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் படி, இந்த கார் ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இது நிசான் நிறுவனத்தின் லீஃப் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.

இந்த மாடலில் ஐந்து கதவுகள், பெரும்பாலும் கண்ணாடி பேனல்கள் இடம்பெற்று இருக்கும். உள்புற கேபின் அளவில் சிறியதாக இருந்தாலும், அதிக இடவசதி கொண்டதாக காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக கான்செப்ட் மாடலுக்கான டீசர் வெளியாகி இருக்கும் நிலையில், இதன் மற்ற அப்டேட்கள் தொடர்ந்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

அமெரிக்க எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா நிறுவனமும் சிறிய எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது டெஸ்லா நிறுவனத்தின் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெறும் என தெரிகிறது. இது டெஸ்லா மாடல் 3  காருக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. பலமுறை இந்த மாடலுக்கான ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

ஓலா எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் டிசைனும் இதே போன்று காட்சியளிக்கிறது. அதன்படி புது எலெக்ட்ரிக் கார் டெஸ்லா மாடலை தழுவியும் வடிவமைக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஓலா எலெக்ட்ரிக் காரின் பக்கவாட்டு பகுதிகளில் கிளீன் ஷீட் டிசைன் செய்யப்பட்டு இருக்கும். தற்போதைய கான்செப்ட் மாடலில் இந்த கார் கதவுகளில் கைப்பிடிகள் எதுவும் இடம்பெறவில்லை. இதன் ப்ரோடக்‌ஷன் மாடலில் அதிநவீன கைப்பிடிகள் இடம்பெற்று இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

காரின் பின்புறம் மிக மெல்லிய எல்.இ.டி. டெயில் லைட்கள் காணப்படுகின்றன. ஓலா எலெக்ட்ரிக் கார் ஸ்போர்ட் அலாய் வீல்களை கொண்டிருக்கும். கான்செப்ட் மாடலின் அலாய்  வீல்கள் பிளேட் போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. இதன் உற்பத்தி வடிவம் கன்வென்ஷனல் ஸ்போக் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த கார் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய "ஃபியூச்சர்ஃபேக்டரி"-இல் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.  

click me!