2000 ரூபாய் நோட்டுகளை இன்னும் மாற்றவில்லையா.? தேதி முடியப்போகுது.. என்ன செய்யணும் தெரியுமா.?

By Raghupati R  |  First Published Sep 27, 2023, 10:02 PM IST

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும்.


ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய/மாற்றிக் கொள்ள இன்னும் மூன்று நாட்களே உள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மே 19 அன்று உத்தரவிட்டது, மக்கள் அதை மாற்ற அல்லது வங்கிகளில் டெபாசிட் செய்ய செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்தது. 

தற்போது ரூ.2000 நோட்டு தொடர்பாக புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.  புளூம்பெர்க் அறிக்கையின்படி, சுமார் ₹24,000 கோடி மதிப்புள்ள சுமார் 240 பில்லியன் ரூபாய்கள் ($2.9 பில்லியன்) இன்னும் புழக்கத்தில் உள்ளன. அதாவது அவை வங்கிகளில் டெபாசிட் செய்யப்படவில்லை அல்லது பரிமாற்றம் செய்யப்படவில்லை.

Latest Videos

undefined

2,000 ரூபாய் நோட்டுகளில் 93% வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன அல்லது மாற்றப்பட்டுள்ளன என்று மத்திய வங்கி இந்த மாத தொடக்கத்தில் கூறியது. “வங்கிகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் 31, 2023 வரை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ₹2,000 நோட்டுகளின் மொத்த மதிப்பு ₹3.32 லட்சம் கோடி” என்று செப்டம்பர் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

இதன் விளைவாக, ஆகஸ்ட் 31, 2023 அன்று வணிகம் முடிவடையும் போது புழக்கத்தில் இருந்த ₹2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ₹24,000 கோடியாக இருந்தது. ₹2,000 நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான செயல்முறை பின்வருமாறு,  உங்கள் அருகிலுள்ள வங்கியைப் பார்வையிடவும். பரிமாற்றம்/ டெபாசிட்டுக்கான ‘கோரிக்கை சீட்டை’ நிரப்பவும். ‘டெண்டரர்’ பெயர் பெரிய எழுத்துக்களில் நிரப்பப்பட வேண்டும்.

பின்னர் உறுப்பினர் அடையாள எண்ணை நிரப்ப வேண்டும், இதில் நீங்கள் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், NREGA அட்டை மற்றும் மக்கள்தொகை பதிவு போன்ற ஆவணங்களைப் பயன்படுத்தலாம். உறுப்பினர் வங்கியில் டெபாசிட் செய்யும் ரூ.2000 நோட்டின் விவரங்களை நிரப்ப வேண்டும்.

அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்த பிறகு, அருகில் உள்ள வங்கியில் மாற்றிக்கொள்ள உங்கள் ₹2000 நோட்டுகளுடன் படிவத்தில் கையெழுத்திட்டு சமர்ப்பிக்க வேண்டும். செப்டம்பர் 30க்குப் பிறகும் இந்த நோட்டுகள் சட்டப்பூர்வமானதாக இருக்கும், ஆனால் அவை பரிவர்த்தனை நோக்கங்களுக்காக ஏற்றுக்கொள்ளப்படாது மற்றும் ரிசர்வ் வங்கியுடன் மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க பிளான் இருக்கா.. இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் - முழு விபரம் இதோ !!

click me!