2000 ரூபாயில்  ஒளிந்திருக்கும்  “ HD “ …..!!!

Asianet News Tamil  
Published : Nov 16, 2016, 10:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
2000 ரூபாயில்  ஒளிந்திருக்கும்  “ HD “ …..!!!

சுருக்கம்

2000 ரூபாயில்  ஒளிந்திருக்கும்  “ HD “ …..!!!

புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருவதால், இந்த நோட்டிற்கு ரகசிய குறியீடாக ஹெச்டி என்கிற வார்த்தையை பயன்படுத்தபட்டது. ஹெச்டிக்கு விரிவாக்கம் என்னவென்றால் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு (High Denomination ) என்று  பொருள்படும் .

இந்த ரகசிய குறியீட்டை வைத்துதான் 2,000 ரூபாய் நோட்டுகளை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மைசூரில் உள்ள பேங்க் நோட் பேப்பர் மில் இந்தியா நிறுவனத்தில் ஹெச்டி அல்லது உயர் மதிப்பு கொண்ட 2,000 ரூபாய் நோட்டுக்கள்  அச்சடிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ரிசர்வ் வங்கியின் பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் நிறுவனமும் (Bharatiya Reserve Bank Note Mudran Private Limited) இந்திய நிதியமைச்சகத்தின் செக்யூரிட்டி பிரிண்டிங் மற்றும் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவும் (Security Printing and Minting Corporation of India Limited) இணைந்து தான்  இந்த  நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

புதியதாக  அச்சடிக்கப்பட்ட  நோட்டுகளை, ஒரு பாதுகாப்பான  அட்டைபெட்டியில்  அடைத்து வைத்து, அதன்  மேல் எச்.டி என  எழுதப்பட்டுள்ளது.இதன்  அர்த்தம்  யாருக்கும் புரியாதவாறு இருந்தது. இத்தகைய  பாதுகாப்பு  அம்சங்களுடன் தான் , பணத்தை  ரிசர்வ்  க வங்கிக்கு  கொண்டுசெல்லப்பட்டது.  

எது எப்படியோ, தற்போது, பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு, வங்கிகள் மூலமாகவும் அஞ்சலகங்கள் மூலமாகவும் ரிசர்வ் வங்கிக்கு  எடுத்து  செல்லப்படுகிறது. பிறகு இந்த நோட்டுகள் இயந்திரத்தின் மூலம் மிக சிறிய துகள்களாக நறுக்கப்பட்டு எரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில்  ரூபாயில்  அச்சிடப்படும்  இடங்கள் :

மேற்கு வங்கத்திலும், மைசூரிலும் உள்ள பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் நிறுவனம், நாசிக்கில் உள்ள செக்யூரிட்டி பிரிண்டிங் மற்றும் மிண்டிங் கார்ப்பரேஷன் மற்றும் தேவாஸில் உள்ள பேங்க் நோட் பிரஸ் ஆகிய இடங்களில் இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

முதலீட்டாளர்கள் கவனம்! ரூ.66 கோடி ஆர்டர்! மல்டிபேக்கர் பங்கு மீண்டும் அதிரடி!
ஜனவரி 1 முதல் எல்லாமே மாறும்.. 2026ல் உங்களை நேரடியாக பாதிக்கும் 10 விதிகள்