
ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் முகேஷ் அம்பானி, ஆண்டு பொதுக் கூட்டத்தில் ஜியோ பயனர்களுக்கு ஒரு சிறப்பான பரிசை அறிவித்துள்ளார். இனி ஜியோ பயனர்களுக்கு 100 ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். பயனர்கள் தங்கள் எல்லா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் உள்ளடக்கங்களையும் இங்கே சேமித்து வைக்கலாம். இங்கே சேமிக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும் என்று முகேஷ் அம்பானி கூறினார்.
சிலருக்கு இதை விட அதிக ஸ்டோரேஜ் தேவைப்படலாம். அவர்களுக்கும் மலிவு விலையில் திட்டங்களை வழங்க முடியும் என்று முகேஷ் அம்பானி உறுதியளித்தார். இந்த தீபாவளி முதல் Jio AI-Cloud வரவேற்பு சலுகையைத் தொடங்குவதற்கான திட்டமிடல் நடைபெறும் என்றும், முகேஷ் அம்பானி தனது எதிர்காலத் திட்டங்களைத் தெரிவித்தார். கிளவுட் தரவு சேமிப்பு மற்றும் தரவு சார்ந்த AI சேவைகள் அனைவருக்கும், எல்லா இடங்களிலும் கிடைக்கும். Jio AI-Cloud சேவைகளும் மலிவானதாக இருக்கும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
5 ரூபாய் மட்டுமே.. 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டம் உங்களுக்கு தெரியுமா?
மேலும், பொதுக்கூட்டத்தில் பேசிய ஆகாஷ் அம்பானி, இன்று நாம் ஜியோ ஹோம் என்ற புதிய ஃபீச்சரை அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். இந்த புதிய தேர்வு உங்கள் வீட்டை முதன்முதலில் கெனக்டெட், கன்வினியண்ட் மற்றும் ஸ்மார்ட் மாடலாக மாற்றுகிறது என்றார். ஜியோ, கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் ஹோம் சர்விஸ்களை அறிமுகப்படுத்துகிறது. அதன் மூலம் இன்று மக்கள் அல்ட்ரா ஃபாஸ்ட் இன்டர்நெட், சிம்லெஸ் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் ஓடிடி அப்ளிகேஷன்களின் பொழுதுபோக்குகளை அனுபவிக்கிறார்கள் என்றார்.
Youtube Premium | திடீரென 58% அதிகரித்த யூடியூப் பிரீமியம் கட்டணம்! பயனாளர்கள் ஷாக்!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.