Passport Service | இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை போர்டல் மூடல்!

By Dinesh TG  |  First Published Aug 29, 2024, 8:40 AM IST

தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக (இன்று) ஆகஸ்ட் 29ம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 6 மணி வரை பாஸ்போர்ட் சேவை போர்டல் மூடப்படுகிறது. இந்த காலகட்டத்தில் புதிய பாஸ்போர்ட்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 2 வரை முன்பதிவு செய்தவர்களுக்கு புதிய தேதி வழங்கப்படும்.
 


அடுத்த சில நாட்களில் நீங்களும் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க நினைக்கிறீர்களா? இந்த செய்தி உங்களுக்கானது. தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை போர்டல் இன்று முதல் 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 6 மணி வரை பாஸ்போர்ட் சேவை போர்டல் இயங்காது என பாஸ்போர்ட் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 2 வரை பாஸ்போர்ட் முன்பதிவு செய்தவர்களுக்கு என்ன செய்வது?

இந்த குறிப்பிட்ட காலத்தில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்கள் 5 நாட்கள் காத்திருக்க வேண்டும். புதிய பாஸ்போர்ட்டுக்கு நீங்கள் ஏற்கனவே விண்ணப்பித்து, ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 2 வரை தேதி கிடைத்திருந்தால், அது ரத்து செய்யப்பட்டு வேறு தேதி வழங்கப்படும். அதாவது, தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை போர்ட்டலில் 5 நாட்களுக்கு எந்த வேலையும் செய்ய முடியாது. செப்2ம் தேதிக்குப் பிறகு புதிய தேதி வழங்கப்படும்.

வெளியுறவுத்துறையிலும் தாக்கம்

அடுத்த 5 நாட்களுக்கு பொதுமக்கள் தவிர அனைத்து MEA/RPO/BOI/ISP/DOP மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் பாஸ்போர்ட் சேவை போர்டல் அமைப்பு கிடைக்காது என்று பாஸ்போர்ட் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் சேவை நிறுத்தப்படுவதால் அனைத்து பாஸ்போர்ட் சேவை மையங்கள் மட்டுமின்றி வெளியுறவுத்துறையிலும் பாதிப்பு ஏற்படும்.

விசா, பாஸ்போர்ட் எதுவும் இல்லாமலே வெளிநாட்டுப் பயணம்! இந்தியர்களை வரவேற்கும் நாடுகள்!!

இந்திய பாஸ்போர்ட் எவ்வளவு சக்தி வாய்ந்தது தெரியுமா?

ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் 2024-ல் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, இந்தியா 82வது இடத்தில் உள்ளது. இந்த தரவரிசையின்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். அதே நேரத்தில், பாகிஸ்தானின் பாஸ்போர்ட் 100வது இடத்தில் உள்ளது. அதன் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 33 நாடுகளுக்கு பயணம் செய்யலாம். ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் உலகின் பாஸ்போர்ட்களை விசா இல்லாத நுழைவு அடிப்படையில் தரவரிசைப்படுத்துகிறது. அதாவது, எந்த நாட்டின் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி அதிகபட்ச இடங்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதை இது குறிக்கிறது.

Tap to resize

Latest Videos

இலங்கை பயணம் இனி ஈசி.. விசா இல்லாமல் செல்லும் வாய்ப்பு.. இந்தியர்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட்!

உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்

ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸின்படி, சிங்கப்பூரின் பாஸ்போர்ட் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட். இது 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கிறது. சிங்கப்பூரைத் தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் பாஸ்போர்ட்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கின்றன.

click me!