1 april 2022: வியாபாரிகளே! ஏப்ரல் 1ம்தேதி முதல் அறிமுகமாகும் 6 முக்கிய விஷயங்கள்: தெரிஞ்சுக்குங்க

Published : Mar 31, 2022, 03:20 PM IST
1 april 2022:  வியாபாரிகளே! ஏப்ரல் 1ம்தேதி முதல் அறிமுகமாகும் 6 முக்கிய விஷயங்கள்: தெரிஞ்சுக்குங்க

சுருக்கம்

1 april 2022:  2022-23ம் ஆண்டுக்கான புதிய நிதியாண்டு நாளை (ஏப்ரல் 1ம் தேதி)பிறக்கிறது. வரும் நிதியாண்டிலிருந்து வர்த்தக ரீதியாக புதிய மாற்றங்கள்,  புதிய விதிகள் நடைமுறைக்கு வர இருக்கின்றன. 

2022-23ம் ஆண்டுக்கான புதிய நிதியாண்டு நாளை (ஏப்ரல் 1ம் தேதி)பிறக்கிறது. வரும் நிதியாண்டிலிருந்து வர்த்தக ரீதியாக புதிய மாற்றங்கள்,  புதிய விதிகள் நடைமுறைக்கு வர இருக்கின்றன. 

இந்த புதிய விதிகள் வர்த்தகம் செய்பவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம். அது குறித்த விவரம் வருமாறு

வர்த்தகரீதியாக வரும் மாற்றங்கள்

பரஸ்பர நிதி:
பரஸ்பர நிதியில் முதலீடு செய்பவர்கள் தங்கள் முதலீட்டை இடர்பாடுகளில் இருந்து மீட்கும்பொருட்டு செபியின் புதிய இடர்பாடு மேலாண்மை விதிகள் நடைமுறைக்கு வருகின்றன.

காற்று மாசுதடுப்பு :
கடுமையான காற்று மாசுத் தடுப்பு நடைமுறைகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.ஆதலால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்து கார்பன்டை ஆக்ஸைடு அளவை13 சதவீதம் குறைத்து 113கிராம் அளவாக குறைக்க வேண்டும்.

இன்வாய்ஸ்:
ஆண்டுக்கு ரூ.20 கோடிக்கும் அதிகமாக விற்று முதல் இருக்கும் நிறுவனங்கள் வரும் நிதியாண்டு முதல் இ-இன்வாய்ஸ் தாக்கல் செய்ய வேண்டும்.

கணக்கு தணிக்கை:
நிறுவனங்கள் பயன்படுத்தும் கணக்குகளை பராமரி்க்கும் மென்பொருள்கள் தணிக்கை நடப்பதைபதிவு செய்ய வேண்டும், ஒவ்வொரு பரிவர்த்தனையையும் பதிவு செய்ய வேண்டும்.

சொகுசு கார் விலை:
மெர்சடிஸ் பென்ஸ், ஆடி வகை கார்கள் ஏற்கெனவே விலை உயர்வை அறிவித்துவிட்டன. ஏப்ரல் 1ம் தேதி முதல் அந்த விலை உயர்வு நடைமுறைக்கு வருகிறது. 

செபியின் புதிய விதிகள்
பங்குதாரர்களுடன் செய்துள்ள ஒப்பந்தங்களை வெளிப்படுத்தும் விதிமுறையில் செபி திருத்தம் செய்துள்ளது இது நாளைமுதல் நடைமுறைக்குவருகிறது. இதன்படி ஒருநிறுவனம் இ்ந்தத் தகவல்களை வெளிப்படுத்த வேண்டுமென்றால், பங்குதாரர்களிடம் அனுமதி பெற வேண்டும்
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Gold Rate: நடுத்தர மக்களுக்கு கிடைத்த குட் நியூஸ்.! அடுத்த 6 மாதத்திற்கு தங்கம் விலை குறித்த கவலை வேண்டாம்.!
தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க