1 april 2022: தெரிஞ்சுக்குங்க! தனிநபர்களுக்கு ஏப்ரல் 1ம்தேதி முதல் இதெல்லாம் மாறப்போகுது; என்னென்ன தெரியுமா?

Published : Mar 31, 2022, 02:14 PM IST
1 april 2022: தெரிஞ்சுக்குங்க! தனிநபர்களுக்கு ஏப்ரல் 1ம்தேதி முதல் இதெல்லாம் மாறப்போகுது; என்னென்ன தெரியுமா?

சுருக்கம்

1 april 2022: ஏப்ரல் 1ம் தேதி முதல் 2022-23ம் ஆண்டுக்கான புதிய நிதியாண்டு பிறக்கிறது. இந்த நிதியாண்டிலிருந்து பல்வேறு வகையான மாற்றங்கள்,  புதிய விதிகள் நடைமுறைக்கு வர இருக்கின்றன. 

ஏப்ரல் 1ம் தேதி முதல் 2022-23ம் ஆண்டுக்கான புதிய நிதியாண்டு பிறக்கிறது. இந்த நிதியாண்டிலிருந்து பல்வேறு வகையான மாற்றங்கள்,  புதிய விதிகள் நடைமுறைக்கு வர இருக்கின்றன. 

இந்த புதிய விதிகள் தனிநபர்கள் மற்றும் வர்த்தகம் செய்பவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம். அது குறித்த விவரம் வருமாறு

ஆதார்-பான் இணைப்பு
2022-23ம் நிதியாண்டு முதல் பான் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் ஆதார் கார்டுடன் இணைத்திருக்க வேண்டும். இதற்கு கடைசித் தேதி 2022, மார்ச்31. இந்த வாய்ப்பைத் தவறவிட்டவர்களின் பான் கார்டு முடக்கப்படும். அதன்பின் ரூ.1000வரை அபராதம் செலுத்தி பான் கார்டை செயல்பாட்டுக்கு கொண்டுவரலாம்.

கிரிப்டோ வரி: 

கிரிப்டோகரன்ஸி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கும், பரிமாற்றத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கும் 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அது ஏப்ரல் 1ம்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 

கேஒய்சி விதிகள்

வங்கியில் கணக்கு வைத்திருப்போர் அனைவரும் தங்களின் கேஒய்சி விவரங்கள் சமர்பிக்காமல் அல்லது முகவரி மாற்றம், கேஒய்வி விவரங்களில் மாற்றம் செய்திருந்தால் அதை முழுமையாக செய்துமுடிக்க மார்ச்31ம் தேதி(இன்று) கடைசித் தேதியாகும். 

மோட்டார் இன்சூரன்ஸ்
கடந்த 2 ஆண்டுகளுக்குப்பின் மோட்டார் வாகன காப்பீட்டில் தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் விலை ஏப்ரல் 1ம்தேதி முதல் குறைகிறது.

அஞ்சலக சேமிப்பு:
அஞ்சலகங்களில் டெபாசிட் வைத்திருப்பவர்கள் அனைவரும் அதை அஞ்சலக சேமிப்புக் கணக்குடன் இணைக்க வேண்டும். அல்லது வேறு ஏதாவது வங்கிக்கணக்குடன் இணைக்க வேண்டும்.அப்போது வட்டித் தொகை மாதந்தோறும் நேரடியாக வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும். 

வருமானவரி ரிட்டன்
வருமானவரி ரிட்டன் கிடப்பில் இருந்தால் அதைத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதியில் ரி்ட்டன் தாக்கல் செய்யத் தவறியவர்கள், இன்று தாக்கல் செய்ய வேண்டும். 


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!