
மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தால் பெட்ரோல் 40 ரூபாய்க்கு வரும்னு சொன்னிங்க என்று நிருபர் கேட்ட கேள்விக்கு யோகா குரு பாபா ராம்தேவ் எச்சரித்து, இதுபோன்ற கேள்வி உங்களுக்கு நல்லதல்ல என்று மிரட்டலாகத் தெரிவித்துச் சென்றார்.
புதிய ஆட்சி
கடந்த 2014ம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்முன் யோகா குரு பாபா ராம்தேவ் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறுகையில் “ மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் பெட்ரோல், 40 ரூபாய்க்கு குறைந்தவிடும். மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றி புதிய ஆட்சியைக் கொண்டுவந்தால் பெட்ரோல், சமையல் கேஸ் விலை குறையும்
ரூ.40 ஆககுறையும்
நான் படித்தவரையில் பெட்ரோலின் அடிப்படை விலை ரூ.35 மட்டும்தான். ஆனால், மற்றவை எல்லாம் வரியாக செலுத்துகிறோம். வரி 50 சதவீதத்திலிருந்து ஒரு சதவீதமாகக் குறைந்தால், பெட்ரோல், டீசல் விலையும் குறையும். இதுதான் எனக்குத் தெரிந்த பொருளாதாரம், நான்படித்த பொருளாதாரம்.
பெரும்பாலான பொருளதார வல்லுநர்கள் நாட்டின் பொருளாதாரத்தை இயக்குவதில்லை. வளர்ச்சி அடைந்த நாடுகள் அளிக்கும் பரிந்துரைகளைத்தான் நடைமுறைப்படுத்தும் அடிமைகளாக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
100ரூபாயைத் தாண்டியவிலை
இந்நிலையில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. பெட்ரோல் விலை லிட்டர் ரூ.107க்கு அதிகமாகவும், டீசல் விலை லிட்டர் ரூ.97க்கும் மேல் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
வாயை மூடு
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் பெட்ரோல் விலை 40ரூபாயாகக் குறையும் என பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தது ஏன் நடக்கவில்லை. இந்த வீடியோவில் ராம் தேவ் கூறியது தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து நேற்று நிருபர்ஒருவர் ராம்தேவிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராம் தேவ் “ வாயை மூடுங்கள் இதுபோன்ற கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள். நீங்கள் கேட்கும் கேள்விக்கெல்லாம் நான் பதில் அளிக்க வேண்டியதில்லை. நான் அதை அப்போது கூறினேன். இப்போது கூறவில்லை. உங்களால் முடிந்ததை செய்யுங்கள். இனிமேல் இதுபோன்ற கேள்வியை கேட்பது உங்களுக்கு நல்லதல்ல” என்று மிரட்டலாக தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.