Budget 2022: Analysis: இதை மிஸ் பண்ணாதீங்க..பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கியமானவை.. பத்து வரிகளில்..!

By Thanalakshmi V  |  First Published Feb 1, 2022, 3:54 PM IST

நடப்பு நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கியமான அம்சங்கள் குறித்து பார்க்கலாம். 
 


பொது பட்ஜெட்டில், நிதி அமைச்சர் குறிப்பிட்டவைகளில் முக்கியமானதாக பார்க்கப்படுபவை..

*அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

* ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை விரைவில் தொடங்கும்.

* நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதம் ஆக இருக்கும் என்று கணிப்பு

* மேக் இன் இந்தியா திட்டம் மூலம் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டன.

* அரசின் மூலதன செலவினங்களுக்கு ரூ.7.5 லட்சம் கோடி ஒதுக்கப்படும். கடந்த ஆண்டை விட 35.4 % அதிகம்.

* மாநிலங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் உதவி வழங்கும் திட்டம் அறிமுகம்

* ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்படும்.

* தேசிய ஓய்வு திட்டத்திற்கு மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் அளவு 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதம் ஆக உயர்த்தப்படும். 

* நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் 25 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு விரிவுபடுத்தப்படும்.

* இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும். எண்ணை வித்துக்கள், சிறு தானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

* 2022-23-ம் ஆண்டில் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை வழங்க ரு.2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* பல்வேறு விவசாய பணிகளுக்கு டிரோன்கள் பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படும்.

* சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.

* கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீள்வதற்காக தேசிய மனநல சிகிச்சை திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

* பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் ரூ.48 ஆயிரம் கோடி செலவில் ஏழைகளுக்கு 18 லட்சம் வீடுகள் கட்டப்படும்.

* 3.8 கோடி வீடுகளுக்கு குடிநீர் வழங்க ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்.

* பாதுகாப்பு படைக்கு தேவையான பொருட்களில் 68 சதவீதம் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படும்.

* டிஜிட்டல் முறையிலான கற்பித்தல் ஊக்குவிக்கப்படும். டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.

* வடகிழக்கு மாநில மேம்பாட்டுக்காக ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* நவீன தொழில்நுட்பத்துடன் ‘சிப்’ பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் முறை அடுத்த ஆண்டு முதல் அறிமுகம்

* மின்சார வாகனங்களில் பேட்டரிகளை ஜார்ஜ் செய்வதற்கு பதிலாக பிரத்தியேக மையங்களில் மாற்றிக் கொள்ளும் வசதியுடன் புதிய திட்டம் 

* நில சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள ஒரே நாடு, ஒரே பதிவு முறையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

* 2030-ம் ஆண்டுக்குள் 280 கிலோவாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம், ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகியவை தொடங்கப்பட உள்ளன.

click me!