கொரோனா காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் முன்னேறி வருகிறது. தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. ஏழை, நடுத்தர மக்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு செயலாற்றி வருகிறது. உலகில் உள்ள பெரிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதாரம் தான் அதிக வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளது.
நாம் கொரோனா காலக்கட்டத்தில் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறோம். தொலைநோக்கு திட்டங்களுடன் நாம் பயணித்து வருகிறோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் தொழில் துறையினர், நடுத்தர வர்க்கத்தினர், ஏழை மக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதும் கொரோனா முடிவுக்கு வராவிட்டாலும், தடுப்பூசிகள் வந்த பிறகு நிலைமை மாறி உள்ளது. அனைத்து துறைகளும் சகஜ நிலைக்கு வேகமாக திரும்பிக் கொண்டிருக்கின்றன.
undefined
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கியது. அதன்படி, இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உரை நிகழ்த்தினார். இந்நிலையில், 2022-23 நிதியாண்டுக்கான காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 4வது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அப்போது, கொரோனா காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் முன்னேறி வருகிறது. தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. ஏழை, நடுத்தர மக்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு செயலாற்றி வருகிறது. உலகில் உள்ள பெரிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதாரம் தான் அதிக வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு அனைத்து வாய்ப்புகளையும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், பெண்கள், பட்டியலின மக்கள், ஏழை மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட். ஏழைகளுக்கு அனைத்து வாய்ப்புகளையும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எல்ஐசி பொதுப்பங்கு வெளியீடு விரைவில் நடைபெறும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.