2022-2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2 வது ஆண்டாக காகிதமில்லாத டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
2022-2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2 வது ஆண்டாக காகிதமில்லாத டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்தார்.இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் நிதி அமைச்சர், நிதி இணையமைச்சர்கள், முத்த அதிகாரிகள் குடியரசு தலைவரை இன்று காலை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
முன்னதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கும் 4 வது பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நாடாளுமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. முன்னதாக பிரதமர் நரேந்திரமோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய மற்றும் முத்த அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்தனர். மேலும் எம்.பிகளுக்கு வழங்கப்பட உள்ள பட்ஜெட் ஆவணங்களும் திவிர பரிசோதனைக்கு பிறகு நாடாளுமன்றம் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2 வது ஆண்டாக காகிதமில்லாத டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்தார். கொரோனா காலத்திலும் நாட்டில் பொருளாதாரம் முன்னெறி வருகிறது என்று தெரிவித்தார்.