மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.. இது தேர்தல் ஆண்டு என்பதால், ஆட்சி மாற்றத்தை கையாளும் வகையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும் வரை அரசாங்க செலவினங்களை உள்ளடக்கும் தற்காலிக நிதித் திட்டமாகும்.

05:59 PM (IST) Feb 01
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை அறிவித்துள்ளார்.
05:32 PM (IST) Feb 01
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பிப்ரவரி 1ம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை வெளியிட்டுள்ளார்.
05:04 PM (IST) Feb 01
ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைதுக்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
04:33 PM (IST) Feb 01
கால்நடைப் பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
03:49 PM (IST) Feb 01
மரியாதையான நடத்தை, வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என பாலியல் தொழிலாளர்கள் உரிமைக் குழு வலியுறுத்தியுள்ளது
03:02 PM (IST) Feb 01
மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட், வளர்ச்சியடைந்த பாரத்திற்கான பட்ஜெட் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்
02:36 PM (IST) Feb 01
பட்ஜெட் உரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்
02:11 PM (IST) Feb 01
02:11 PM (IST) Feb 01
மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கு சிறப்பு உதவி திட்டத்தின் கீழ், ரூ.75,000 கோடி வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
01:33 PM (IST) Feb 01
01:32 PM (IST) Feb 01
01:22 PM (IST) Feb 01
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் பிரதமரும், நிதியமைச்சருமான மொரார்ஜி தேசாயின் சாதணையை சமன் செய்துள்ளார்
01:09 PM (IST) Feb 01
01:05 PM (IST) Feb 01
12:46 PM (IST) Feb 01
12:46 PM (IST) Feb 01
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்ற மக்களவை தள்ளி வைக்கப்பட்டுள்ளது
12:19 PM (IST) Feb 01
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் நகலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
12:11 PM (IST) Feb 01
இடைக்கால பட்ஜெட் உரையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
12:10 PM (IST) Feb 01
பால் கொள்முதலை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
12:07 PM (IST) Feb 01
உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
12:07 PM (IST) Feb 01
மக்களவையில் மத்திய பட்ஜெட் 2024 நிறைவேறியது. அவை நாளை பகல் 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
12:04 PM (IST) Feb 01
2024-25ஆம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
12:01 PM (IST) Feb 01
கூடுதல் செலவினங்கள் குறித்த விவரங்களை அடுத்த பட்ஜெட்டில் நாங்களே தாக்கல் செய்கிறோம். சிரித்தபடி கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
12:00 PM (IST) Feb 01
50 வருட வட்டியில்லா கடனுடன் ரூ.1 லட்சம் கோடி நிதி கருவூலம் நிறுவப்படும். இதன் நோக்கம் நீண்ட கால நிதியுதவி அல்லது குறைந்த அல்லது பூஜ்ய வட்டி விகிதங்களுடன் மறு நிதி செலுத்துவதாகும் - நிர்மலா சீதாராமன்
11:59 AM (IST) Feb 01
வருமான வரி விதிக்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை. நிறுவனங்களுக்கான வரி 22% மாக குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக செலுத்திய வரியை திரும்ப பெறுவதற்கான கால அளவு 2013ல் 94 நாட்களாக இருந்தது. தற்போது 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
11:55 AM (IST) Feb 01
பெண் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 2 கோடியில் இருந்து 3 கோடியாக உயர்த்த திட்டம். மத்திய அரசின் திட்டங்களால் 2 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக ஆகியுள்ளனர்.
11:55 AM (IST) Feb 01
Union Budget 2024: நிதிப் பற்றாக்குறையின் திருத்தப்பட்ட மதிப்பீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8% - நிர்மலா சீதாராமன்
11:55 AM (IST) Feb 01
கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும். மாநிலங்களுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ.1.2 லட்சம் கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
11:50 AM (IST) Feb 01
விவசாயத் துறையின் மேலும் வளர்ச்சிக்காக, அறுவடைக்குப் பிந்தைய நடவடிக்கைகளில் அரசு மற்றும் தனியார் முதலீட்டை மேலும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
11:49 AM (IST) Feb 01
கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க 9 வயது முதல் 18 வயது பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கப்பட்டுள்ளது.
11:49 AM (IST) Feb 01
உள்நாட்டு சுற்றுலாவுக்கான ஆர்வத்தை நிவர்த்தி செய்ய, துறைமுக இணைப்பு, சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இந்த திட்டங்கள் லட்சத்தீவு உள்ளிட்ட நமது தீவுகளில் மேற்கொள்ளப்படும் - சீதாராமன் சீதாராமன்
11:45 AM (IST) Feb 01
ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படும். ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை உருவாக்க 1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும். 5 ஒருங்கிணைந்த கடல்சார் பூங்கா அமைக்கப்படும். 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயிலின் தரத்திற்கு உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.
11:43 AM (IST) Feb 01
ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும். சூரிய மேற்கூரை வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
11:43 AM (IST) Feb 01
கோவிட் கால கட்டத்தில் சவால்கள் இருந்தபோதும், பிரதமர் ஆவாஸ் யோஜனா கிராமப்புற திட்டத்தை செயல்படுத்துவது தொடர்ந்தது. மேலும் 3 கோடி வீடுகள் என்ற இலக்கை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது. குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேவையை பூர்த்தி செய்ய அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகள் காட்டப்படும் - நிர்மலா சீதாராமன்
11:38 AM (IST) Feb 01
மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது. 4 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
11:36 AM (IST) Feb 01
நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும். மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது. 2027ல் இந்தியா வளர்ந்த நாடு என்கிற கனவினை எட்டும்.
11:32 AM (IST) Feb 01
மகளிர் இட ஒதுக்கீடு, முத்தாக் தடை போன்ற பெண்களுக்கான சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் தடுமாறிய நிலையில், இந்தியா சிறப்பாக கையாண்டது.
11:29 AM (IST) Feb 01
தமிழக செஸ் வீரர் பிரஞ்யானந்தாவுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு. இந்தியா விளையாட்டு துறையில் முன்னேறி வருவதாகவும் பெருமிதம் கொண்டுள்ளார்.
11:27 AM (IST) Feb 01
பாஜகவுக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
11:26 AM (IST) Feb 01
பிரதம மந்திரி முத்ரா யோஜனா 43 கோடி கடன்களை வழங்கியுள்ளது. தொழில் முனைவோர் நோக்கங்களுக்காக 22.5 லட்சம் கோடி. ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ், ஸ்டார்ட்அப் இந்தியா மற்றும் ஸ்டார்ட்அப் கிரெடிட் கேரண்டி திட்டங்கள் மூலம் நமது இளைஞர்களுக்கு உதவுகின்றன.