இந்தியாவில் பணியாற்றுவதற்கு சிறந்த 30 உற்பத்தி நிறுவனங்கள் பட்டியலை “கிரேட் ப்ளேஸ் டு வொர்க் இந்தியா” நிறுவனம் தொடர்ந்து 5-வது ஆண்டாக வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பணியாற்றுவதற்கு சிறந்த 30 உற்பத்தி நிறுவனங்கள் பட்டியலை “கிரேட் ப்ளேஸ் டு வொர்க் இந்தியா” நிறுவனம் தொடர்ந்து 5-வது ஆண்டாக வெளியிட்டுள்ளது.
ஏறக்குறைய 3 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்களின் குரலாக தொடர்ந்து 5-வது ஆண்டாக இந்த சர்வே வெளியிடப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள 130 உற்பத்தி நிறுவனங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 30 நிறுவனங்கள் தரவரிசைப்படி பட்டியலிடப்படுகின்றன. அந்த வகையில் முதல் 30 நிறுவனங்கள் பட்டியலை “கிரேட் ப்ளேஸ் டு வொர்க் இந்தியா” நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது
undefined
சர்வதேச நிறுவனமான “கிரேட் ப்ளேஸ் டு வொர்க் இந்தியா” நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக உலகளவில் தொழிலாளர்களின் அனுபவங்கள், அவர்களை நடத்தும் முறை, பணிச்சூழல், கலாச்சாரம் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த ஆய்வி்ல பங்கேற்று வருகின்றன.
இந்தியாவில் தொடர்ந்து 5-வது ஆண்டாக, சிறந்த உற்பத்தி நிறுவனங்கள் குறித்து “கிரேட் ப்ளேஸ் டு வொர்க் இந்தியா” நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்துள்ளது. இதில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்தியாவின் உற்பத்தி நிறுவனங்களின் தரம் மேம்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்ளுக்கு சிறந்த பணிச்சூழலை, கலாச்சாரத்தை, நிலையான வேலைவாய்ப்பை, நேர்மையான அனுகுமுறையை வழங்குகிறதா என்பது கணக்கில் கொள்ளப்படும்.
இந்த ஆய்வின் மூலம் ஒரு நிறுவனம் சென்று கொண்டிருக்கும் பாதை சரியானதுதானா, இலக்கை நோக்கி சரியாக செல்கிறோமா என்பதை தெளிவாகக் கூறும். இந்த ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்கள், அதன் தலைவர்கள் தங்கள் நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும், குறைகளைக் களையவும், இலக்கை நோக்கி நகரவும் இது மிகுந்த உதவியாக இருந்து வருகிறது
அதன்படி இந்தியாவில் 30 சிறந்த உற்பத்தி நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன அவற்றின் விவரம்: