Budget 2022 Farmers : கோதாவரி,பெண்ணாறு,காவிரி இணைப்பு திட்டத்திற்கு அனுமதி..நீர்பாசனத்திற்கு 44 ஆயிரம் கோடி..

Published : Feb 01, 2022, 11:57 AM ISTUpdated : Feb 01, 2022, 12:42 PM IST
Budget 2022 Farmers : கோதாவரி,பெண்ணாறு,காவிரி இணைப்பு திட்டத்திற்கு அனுமதி..நீர்பாசனத்திற்கு 44 ஆயிரம் கோடி..

சுருக்கம்

மத்திய பட்ஜெட்டில், காவிரி - பெண்ணாறு திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில், காவிரி - பெண்ணாறு திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோதாவரி, பெண்ணாறு, காவிரி உள்ளிட்ட 5 நதிகள் இணைப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோதாவரி- பெண்ணாறு- காவிரி நதி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களிடையே கருத்தொற்றுமை ஏற்பட்ட பின்  நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கோதாவரி, பெண்ணாறு, காவிரி இணைத்தால் தமிழகத்திற்கு பலனளிக்கும்.

எண்ணெய் வித்துகள், சிறு தானியங்கள் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்படும். 44 ஆயிரம் கோடியில் நீர்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும். இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். சிறுதொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக 2 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். டிரோன் மூலம் நிலங்களை அளப்பதும், விளைச்சலை கணிப்பது போன்ற முன்னெடுப்புகள் எடுக்கப்படும். உளநாட்டிலே எண்ணெய் வித்துகள் உற்பத்தியை அதிகரித்து  இறக்குமதியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நடப்பு நிதியாண்டில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி 9.27% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா காலத்தில் நாட்டின் பொருளாதாரம் முன்னேறி வருகிறது. தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு செயலாற்றி வருகிறது. உலகில் உள்ள பெரிய நாடுகளில் இந்தியா பொருளாதாரம் தான் அதிக வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடிதளம் அமைக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. சுயசார்பு இந்தியா மூலம் 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கபட்டுள்ளது.ஏழைகளுக்கு அனைத்து வாய்ப்புகளையும் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முக்கியத்துவம் வழங்கப்படும். இளைஞர்கள்,பெண்கள்,பட்டியலின மற்றும் ஏழை மக்களுக்கான வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று கூறினார்.

நாட்டில் தடுப்பூசி திட்டம் மிக விரைவாக செயல்படுத்தப்பட்டு பொருளாதார மீட்சிக்கும் பெரிய அளவில் உதவியாக இருந்தது.நாடுமுழுவதும் வரும் நிதியாண்டில் 22 ஆயிரம் கி.மீ தொலைவிற்கு ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்படும். உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு இரயில் நிலையம், ஒரு உற்பத்தி பொருள் என்ற நடைமுறை கொண்டுவரப்படும். நாடுமுழுவதும் 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.மேலும் போக்குவரத்து வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியவத்துவம் கொடுக்கப்படும். 2023 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் 25 ஆயிரம் கி.மீ  தூரத்திற்கு விரிவுப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.இயற்கை உரங்கள் பயன்பாட்டிற்கு ஊக்கம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

Budget 2025 Nirmala Sitharaman Saree: நிர்மலா சீதாராமன் பட்ஜெட் நாள் சேலையில் மறைந்திருக்கும் ரகசியம்!!
Budget 2025 LIVE Updates: மாதம் ரூ.1 லட்சம் வரை ஊதியம் வாங்குவோர் இனி வரி கட்ட தேவையில்லை