2022-23-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் பேசி வருகிறார்.. தொடர்ந்து 2-வது ஆண்டாக அவர் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். கொரோனா காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் முன்னேறி வருகிறது. தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2022-23-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் பேசி வருகிறார்.. தொடர்ந்து 2-வது ஆண்டாக அவர் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். கொரோனா காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் முன்னேறி வருகிறது. தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. ஏழை, நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு செயலாற்றி வருகிறது. அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
undefined
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27%ஆக இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முக்கியத்துவம் வழங்கப்படும் என்று கூறிய அவர், இளைஞர்கள், பெண்கள், ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
* 2023ம் ஆண்டுக்குள் 2000 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு உருவாக்கப்படும்.
* 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த 3 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும்.
* நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் 25,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரிவுப்படுத்தப்படும்.
* வேளாண் ஏற்றுமதிக்கு ரயில்வே துறையை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* மலைப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொடர்பு வசதியை மேம்படுத்த தனியார் பங்களிப்புடன் திட்டம்.
* one station, one Product திட்டம் உள்ளூர் வணிகத்திற்கு உதவியாக இருக்கும், பொருட்கள் விநியோக பாதையை மேம்படுத்தும். 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும்.
* மெட்ரோ ரயில் திட்டங்கள் புதிய வசதிகளுடன் செயல்படுத்தப்படும்.
* ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது
* சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் சாலை, ரயில், கப்பல் போக்குவரத்து இணைக்கப்படும்.
* நகர்ப்புறங்களில் பொது போக்குவரத்து பயன்பாடு ஊக்குவிக்கப்படும்.
* மெட்ரோ திட்டங்கள் மூலம் நகர்ப்புற போக்குவரத்து மேம்படுத்தப்படும்.
* மலைவாழ் மக்களுக்கு போக்குவரத்தை எளிதாக்க 'பர்வத்மாலா' திட்டம்