பிக்பாஸ் வீட்டில் விசித்ராவிடம் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட புரோமோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
100 நாள் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 6 ஆண்டுகளாக தமிழில் நடத்தப்பட்டு வந்தது. வெற்றிகரமாக 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில், கடந்த அக்டோபர் 1-ந் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது. வழக்கமாக ஒரு வீட்டில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி இந்த முறை 2 வீடுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
இதற்கு முந்தைய சீசன்கள் எல்லாம் முதல் வாரம் ஜாலியாக செல்லும், போகப்போக தான் போட்டியாளர்களிடையே சண்டை வெடிக்கும். ஆனால் இந்த முறை முதல் வாரத்திலேயே ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதால், அனல்பறக்க சென்றுகொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 7. பிக்பாஸ் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய போட்டியாளர்கள் பட்டியலில் வனிதாவுக்கு எப்பவுமே தனி இடம் உண்டு. பிக்பாஸ் 3-வது சீசனில் பங்கேற்றபோது அவர் செய்த அலப்பறைகள் ஏராளம்.
தற்போது பிக்பாஸ் 7-வது சீசனில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். சைலண்டாகவே இருந்து வந்த ஜோவிகா, சில தினங்களுக்கு முன் நடந்த டாஸ்க்கில் தனக்கு படிப்பு சரியாக வராதததால் தான் 9-ம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டதாக கூறி கண்கலங்கினார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற டாஸ்கின் போது ஜோவிகாவிடம் பள்ளியில் படிக்கும் அடிப்படையான கல்வி என்பது முக்கியமானது என பேசினார்.
of
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/eIDUZyAyUT
இதனால் கடுப்பான ஜோவிகா, எல்லாரும் படிச்சு பெரிய ஆள் ஆகணும்னு இல்லனு கொதித்தெழுந்தார். அப்போது குறுக்கிய முயன்ற விசித்ராவிடம், படிப்புங்குற விஷயத்துல நிறைய குழந்தைகள் தப்பான இதுல போகுது அவர்கள் சார்பாக தான் நான் இங்கு வந்திருக்கிறேன் என ஜோவிகா சொல்ல, நீ என்ன வேண்டுமானாலும் பேசுறது கருத்து சுதந்திரம் இல்ல என விசித்ரா குறுக்கிட்டு பேசியதைக் கேட்டு டென்ஷன் ஆன ஜோவிகா, நான் தப்பா எதாவது சொன்னனா, நான் பேசிட்டு இருக்கேன் சைலண்டா இருங்கனு விசித்ராவை பார்த்து ஒரு சவுண்டு விட்டதை கேட்டு பிக்பாஸ் வீடே ஆடிப்போனது. ஜோவிகாவின் பேச்சில் நியாயம் இருந்ததால் நிக்சன், ரவீனா, பவா செல்லதுரை ஆகியோர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
அதேபோல் விசித்ரா தன்னை நீ கண்டிப்பா 12ம் வகுப்பு முடிக்க வேண்டும் என கூறியதை சுட்டிக்காட்டியதோடு, இதற்கு குறும்படம் கூட போட சொல்லுமாறு கூறினார். இறுதியா என்னைப்பற்றி எதுவேண்டுமானாலும் பேசு என் பேமிலியை பற்றி பேசாதே என விசித்ராவிடம் காட்டமாக கூறியுள்ளார் ஜோவிகா. இதுகுறித்த புரோமோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் வனிதா பொண்ணுனா சும்மாவா என பயர் விட்டு வருகின்றனர்.
of
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/IIh2xjnYk6
இதையும் படியுங்கள்...மகளின் இறப்புக்கு பின்... விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கொடுத்ததா ரத்தம் திரைப்படம்? விமர்சனம் இதோ