உங்க கூட ஒரே பெட்ல படுக்கணும்... விசித்ராவிடம் வாய்விட்டு மாட்டிக்கொண்ட பிரதீப் - வைரலாகும் வீடியோ

Published : Oct 06, 2023, 10:39 AM IST
உங்க கூட ஒரே பெட்ல படுக்கணும்... விசித்ராவிடம் வாய்விட்டு மாட்டிக்கொண்ட பிரதீப் - வைரலாகும் வீடியோ

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள பிரதீப் விசித்ராவிடம் வில்லங்கமாக பேசி மாட்டிக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் பங்கேற்று உள்ளனர். இந்நிகழ்ச்சி தொடங்கி இன்னும் ஒரு வாரம் கூட முடியாத நிலையில், தற்போதே போட்டியாளர்கள் இடையே பிரச்சனைகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக பிரதீப் ஆண்டனி தான் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வருகிறார்.

நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் பெண் போட்டியாளர்கள் தோற்றால், அவர்களின் மேக்கப் பொருட்களை பிக்பாஸிடம் கொடுத்துவிட வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கு பிரதீப் சொன்ன கமெண்ட் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேக்கப்பை கலைத்தால் தான் பெண்களின் உண்மை முகம் வெளியவரும், அதனை பார்க்க விரும்புவதாக கூறி இருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு பெண் போட்டியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தாங்கள் மேக்கப் போடாமலும் அழகாக தான் இருப்போம் என்பதை காட்ட மேக்கப்பை நீக்கிவிட்டு பிரதீப்புக்கு பதிலடி கொடுத்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் தற்போது நடிகை விசித்ராவிடம் சர்ச்சைக்குரிய வகையில் பிரதீப் பேசியுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி ஆணும், பெண்ணும் ஒரே பெட்டில் படுக்க வேண்டும் என்று பிக்பாஸ் தண்டனை கொடுக்க வேண்டும் என பிரதீப் கூறியதை கேட்டு ஷாக்கான விசித்ரா, அப்படி சொன்னால் நீங்க பண்ண மாட்டீங்களே என சொல்ல, அதற்கு பிரதீப் நான் பண்ணுவேன் என கூறுகிறார்.

உடனே விசித்ரா மைக் மூலம் பிக்பாஸிடம், இவர் சொன்ன டாஸ்க் நடந்தாகனும் கேட்டதோடு, இவர் மட்டும் தைரியமா என்கூட படுத்து தூங்கிட்டா, என் பெயரை மாத்திக்கிறேன் என சவால் விட்டுள்ளார். பின்னர் டென்ஷன் ஆன விசித்ரா, அது எப்படி நீ என்கூட பெட்ல படுத்து தூங்கனும்னு சொல்லலாம் என கேட்க, உடனே பிரதீப், நான் பெட்ல படுத்து தூங்கனும்னு சொல்லல, உங்க பக்கத்துல படுத்து தூங்கனும்னு தான் சொன்னேன் என மழுப்பினார். நீ வாடா உண்ணை ஒரே அடியா தூங்க வச்சிடுறேன் என விசித்ரா பேசும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... பட்டையை கிளப்பும் சீசன் 7.. சின்ன பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவர் தானா? வெளியான சுவாரசிய தகவல்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதே 4 ஸ்டெப்... ரம்யா ஜோ இன்னும் மாறவே இல்ல; மீண்டும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட வீடியோ வைரல்
நீலாம்பரி போல் திமிர் காட்டிய சாண்ட்ரா... படையப்பாவாக மாறி பதிலடி கொடுத்த கானா வினோத்..!