பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய பின்... போட்டியாளர்களுக்கு ஸ்வீட் அனுப்பிய கமல் - காரணம் என்ன?

By Ganesh A  |  First Published Nov 5, 2023, 12:50 PM IST

பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய கமல்ஹாசன், தற்போது ஹவுஸ்மேட்ஸுக்கு அல்வா அனுப்பிய வீடியோ வெளியாகி உள்ளது.


நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்தைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 6 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதில் அனன்யா ராவ், விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா ஆகியோர் மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர்.

எஞ்சியுள்ள இருவரில் பவா செல்லதுரை உடல்நலக்குறைவு காரணமாக முதல் வார இறுதியிலேயே வெளியேறினார். இதையடுத்து நேற்று பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். பெண்கள் அவர்மீது வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார் நடிகர் கமல்ஹாசன்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பெண்களின் பாதுகாப்பு கருதி பிரதீப்பை வெளியேற்றியதாக கமல் சொன்னாலும்,  அவரின் இந்த முடிவுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பிக்பாஸ் டைட்டில் வெல்லும் தகுதியோடு இருந்த ஒரு போட்டியாளரை அநியாயமாக வெளியேற்றிவிட்டதாக நெட்டிசன்களும் கொந்தளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதீப் வெளியேறிய பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் அல்வா அனுப்பி வைத்த வீடியோ வெளியாகி உள்ளது. இந்த அல்வா பின்னணியில் ஒரு சர்ப்ரைஸ் ஒளிந்திருக்கிறது. அது சாதாரண அல்வா இல்லை பிக்பாஸ் போட்டியாளர்களுக்காக செய்யப்பட்ட பாவக்காய் அல்வாவாம்.

கசப்பான அனுபவத்தை கொடுத்த போட்டியாளர்களுக்கு இந்த அல்வாவை கொடுக்கும்படி ஒரு டாஸ்க் ஒன்றை வைத்துள்ளார் கமல், அதற்காக தான் இந்த அல்வாவை வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார். ஆரம்பத்தில் கமல் அல்வா என்றதும் ஆசையாக இருந்த போட்டியாளர்களுக்கு அதை வைத்தே ஆப்பு வைத்திருக்கிறார் கமல். இதுகுறித்த புரோமோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

of

Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/p8n9KNe7oN

— Vijay Television (@vijaytelevision)

இதையும் படியுங்கள்... தன்னுடைய அரசியல் லாபத்திற்காக பிரதீப்பை பலிகடா ஆக்கினாரா கமல்? ரெட் கார்டு சர்ச்சையால் சீறும் நெட்டிசன்ஸ்

click me!