உச்ச நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததும், அதை தொடர்ந்து தனக்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்து நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா பேசியிருந்த நிலையில் யார் அந்த ஹீரோ என்பதை நெட்டிசன்கள் யூகித்துள்ளனர்.
தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை அனன்யா, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, ஐஷூ, கானா பாலா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பவா செல்லதுறை தானாக வெளியேறிய நிலையில், பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
பிரதீப் ஆண்டனி வீட்டை விட்டு சென்ற பிறகு விசித்ராவுக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டே வருகின்றனர். பிரதீப் வெளியேற்றத்திற்கு பிறகு விசித்ரா சொன்ன கருத்துகளும், தனக்கு எதிராக செயல்படும் ஹவுஸ்மெட்ஸை அவர் டீல் செய்யும் விதமும் ரசிக்ர்களை கவர்ந்துள்ளது. இதனால் வார இறுதியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசன் எபிசோடில் விசித்ராவுக்கு கைத்தட்டல் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் பூகம்பம் டாஸ்க் நடந்து வருகிறது. இதில் தங்கள் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள் குறித்து சொல்ல வேண்டும் என்று கூறப்பட்டது. அந்த வகையில் நடிகை விசித்ரா தனக்கு நேர்ந்த மோசமான அனுபதத்தையும், அதனால் தான் திரைத்துறையை விட்டே விலகியதாகவும் கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அப்போது பேசிய அவர் “ 2001-ம் ஆண்டு ஒரு படத்தில் கமிட் ஆன போது, அந்த படத்தின் ஷூட்டிங்காக மலம்புழா சென்றோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஒரு பார்ட்டி நடந்தது. அந்த பார்ட்டிக்கு அந்த படத்தில் ஹீரோ உட்பட பலரும் வந்திருந்தனர். நானும் அந்த பார்ட்டிக்கு சென்றேன். அப்போது அப்படத்தின் ஹீரோவை நான் சந்தித்தேன். அவர் என்னை பார்த்த போது நீங்க இந்த படத்தில் நடிக்கிறீங்களான்னு கேட்டார்.. ஆமா என்று சொன்னேன்.. என் ரூமிற்கு வாங்க என்று சொன்னார். என் பெயரை கூட அவர் கேட்கவில்லை.
ஆனால் நான் என் ரூமிற்கு சென்று தூங்கிவிட்டேன். அதன்பின்னர் தான் நான் பிரச்சனைகள் வர தொடங்கியது. நான் தங்கியிருந்த ரூமை தட்டிக்கொண்டே இருந்தார்கள்.. அப்போது அந்த ஹோட்டல் மேனஜராக இருந்த (தற்போது விசித்ராவின் கணவர்) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூமில் என்னை தங்க வைத்து உதவி செய்தார்.
Popular Actress and Tamil Biggboss S7 Contestant shares her shocking and personal bitter experience while shooting for her Tamil film years ago! pic.twitter.com/1RJimK0sag
— Akshay (@Filmophile_Man)
இதை தொடர்ந்து அந்த கிராமத்தில் சண்டை காட்சி நடப்பது போல் படமாக்கப்பட்டது. அப்போது யாரோ ஒரு சண்டை கலைஞர் என்னை தவறான முறையில் தொட்டார். நான் உடனே சண்டை கலைஞரிடம் சென்று முறையிட்டேன். அவர் அந்த செட்டில் அனைவரின் முன்னிலையிலும் என்னை அறைந்துவிட்டார். அந்த நேரத்தில் யாருமே எனக்கு உதவிக்கு வரவில்லை அதன்பின்னரே சினிமாவில் இருந்து ஒதுங்க முடிவு செய்தேன்” என்று தெரிவித்தார்.
விசித்ரா கூறிய இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் யார் அந்த டாப் ஹீரோ, அது எந்த படம் என்ற தேடலில் நெட்டிசன்கள் ஈடுபட்டனர். அதன்படி விசித்ரா 2001-ம் ஆண்டு நடித்த படங்களின் பட்டியலை ஆராய்ந்து அது எந்த படம் என்பதை கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர்.
shares her personal bitter experience while shooting 20 years ago! I think vichitra specified that worst incident in this fight scene.
Hero: balakrishna
movie :Bhalevadivi Basu(Telugu) and Stunt master who slapped her was a.vijay pic.twitter.com/PkCcICvvbY
அதன்படி 2001-ம் ஆண்டு தெலுங்கில் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பலேவாதிவி பாசு என்ற தெலுங்கு படத்தில் தான் விசித்ரா சொன்ன சம்பவம் நடந்திருக்கலாம் என்று நெட்டிசன்கள் யூகங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் விசித்ரா சொன்ன காட்சிகளை போல் ஒரு காட்சியை பகிர்ந்துள்ளனர். எனவே இந்த படத்தின் ஹீரோவான பாலகிருஷ்ணா தான் விசித்ராவை படுக்கைக்கு அழைத்த உச்ச நடிகரா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அந்த ஷூட்டிங்கில் விசித்ராவை அறைந்த ஸ்டண்ட் மாஸ்டர் விஜய் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.