எலிமினேட் ஆகப்போறது தெரியாம... அடுத்த வார கேப்டன் பதவிக்கு ஆசைப்படும் மாயா - இதெல்லாம் ஓவரா இல்லையா?

By Ganesh A  |  First Published Oct 10, 2023, 12:50 PM IST

நாமினேஷனில் உள்ளதை மறந்து மாயாவும், விஷ்ணுவும் அடுத்த வாரம் கேப்டன் பதவிக்கு ஆசைப்படுவதை பார்த்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.


பிக்பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் முதன்முறையாக இந்த சீசனில் தான் இரண்டு வீடுகளுடன் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. குறைவாக இம்பிரஸ் செய்தவர்கள் என கேப்டன் யாரையெல்லாம் தேர்ந்தெடுத்து சொல்கிறாரோ அந்த போட்டியாளர்கள் சுமால் பாஸ் வீட்டுக்கு செல்ல வேண்டும். அங்கு சமையல் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் அவர்கள் தான் செய்ய வேண்டும் என விதி உள்ளது.

அந்த வகையில் இந்த வாரம் ஐஷூ, பிரதீப், மாயா கிருஷ்ணன், விஜய் வர்மா, கூல் சுரேஷ், விஷ்ணு விஜய் ஆகிய 6 பேர் சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். ஆரம்பம் முதலே பிரதீப் மீது கடும் கோபத்தில் இருக்கும் மாயா, அவரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்கிற பயத்தில் சுமால் பாஸ் வீட்டுக்குள் செல்ல மறுத்தார்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பின்னர் பிக்பாஸ் அழைத்து பேசி சமாதானப்படுத்தியதை அடுத்து தான் மாயா சுமால் பாஸ் வீட்டுக்கு சென்றார். மாயா இப்படி தொடர்ந்து பிரதீப்பை டார்கெட் செய்து வருவதால் ரசிகர்களும் அவர் மீது கடுப்பில் உள்ளனர். இந்த வார நாமினேஷனிலும் மாயா சிக்கி உள்ளதால் அவரை வெளியே அனுப்பும் முடிவில் ரசிகர்கள் உள்ளனர்.

அது தெரியாமல் தற்போதே அடுத்த வார தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு மாயா பேசியுள்ள புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அடுத்தவாரம் நம்ம குரூப்ல உள்ளவங்க தான் தலைவர் ஆகணும் என மாயாவும், விஷ்ணுவும் பேசிக்கொள்வதை பார்த்த நெட்டிசன்கள், அதற்கு அடுத்த வாரம் நீங்க இந்த வீட்ல இருக்கனுமே என கிண்டலடித்து வருகின்றனர்.

of

Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/Ox2T5OGBHJ

— Vijay Television (@vijaytelevision)

இதையும் படியுங்கள்... 2 கணவர்களோடும் தொடர்பில் தான் இருக்கிறேன்... ஜோவிகாவின் தந்தை இவர் தான் - சர்ச்சைகளுக்கு வனிதா விளக்கம்

click me!