வீடியோவில் ஜோமேட்டோ நிறுவனத்தின் டெலிவரி ஏஜெண்ட் ஒருவர் ரூ.17 லட்சம் மதிப்புள்ள சுசுகி ஹயபுஸா பைக்கில் சென்று உணவை டெலிவரி செய்கிறார்.
ஒரு இளைஞர் ரூ.17 லட்சம் மதிப்புள்ள சுசுகி ஹயபுஸா பைக்கில் உணவு டெலிவரி ஏஜெண்டாக வேலை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவில் இருப்பவர் யார்? ஏன் இப்படி விலை உயர்ந்த பைக் வைத்திருப்பவர் உணவு டெலிவரி வேலை செய்கிறார் என்று நெட்டிசர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் இதுபோல வினோதமான பதிவுகளை வெளியிட்டு பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். கிடைக்கும் புகழை பயன்படுத்தி படிப்படியாக முன்னேறி கோடிகளில் புரளும் நபர்களும் பலர் இருக்கிறார்கள். சிலர் நெட்டிசன்களிடையே இருக்கும் பாப்புலாரிட்டை சினிமாவுக்கான என்ட்ரி டிக்கெட்டாக மாற்றிக்கொள்கிறார்கள்.
கண்டெய்னர் லாரிகள் சென்னைக்குள் வரக்கூடாது! தீபாவளியை முன்னிட்டு தடை உத்தரவு!
அந்த வகையில் பிரபலமான எச்எஸ்பி அஃபிஸியல் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஜோமேட்டோ நிறுவனத்தின் டெலிவரி ஏஜெண்ட் ஒருவர் ரூ.17 லட்சம் மதிப்புள்ள சுசுகி ஹயபுஸா பைக்கில் சென்று உணவை டெலிவரி செய்யும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பைக்கின் பின்னால் உணவு டெலிவரிக்காக வைத்திருக்கும் பெரிய பையும் இருப்பதைக் காணமுடிகிறது.
லட்சக்கணக்கான விலை மதிப்புள்ள பைக்கை ஓட்டிச் சென்று உணவு டெலிவரி செய்யும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வீடியோவில் வரும் சுசுகி ஹயபுஸா பைக்கின் சொந்தக்காரர் எச்எஸ்பி அஃபிஸியல் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்திவரும் ஹார்ட் ப்ரீத் சிங் என்றும் வீடியோ டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
ஹைல்மெட் போடாமல் டர்பன் அணிந்தபடி பைக் ஓட்டும் நபர் யார் என்று தெரியவில்லை. ஹார்ட் ப்ரீத் வேறு யாரையாவது இப்படி பைக் ஓட்ட வைத்து வீடியோ எடுத்தாரா என்றும் உறுதிபடுத்த முடியவில்லை. ஆனால், இந்த விவரம் இல்லாமல் தெரியாவிட்டாலும் இந்த வீடியோ நெட்டிசன்களுக்கு ஏற்படுத்தும் ஆச்சரியத்துக்கும் மட்டும் அளவே இல்லை.
கடந்த வாரம், இந்தூரிலும் இதேபோன்ற சம்பவம் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், சாலையில் ஜோமேட்டோ முத்திரையுடன் கூடிய ஜெர்சி அணிந்து யமஹா R15 மோட்டார் சைக்கிளில் ஒரு பெண் சென்றுகொண்டிருந்தார்.
உங்க மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? தெரிந்துகொள்வது எப்படி? வல்லுநர்கள் கொடுக்கும் ஐடியா