Okaya EV : மீண்டும் ஒரு அறிமுகம்.. அட்டகாசமான ஸ்டைலில் புதிய பைக்கை களமிறக்கிய ஒகாயா - விலை & முழு விவரம்!

By Ansgar R  |  First Published Nov 2, 2023, 11:28 AM IST

Okaya Moto Fasst Bike : உலக அளவில் உள்ளதைப் போலவே, தற்பொழுது இந்தியாவிலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனை அடுத்து பல நிறுவனங்கள் தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை எலக்ட்ரிக் வடிவில் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் ஏற்கனவே இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனமான ஒகாயா, தனது புதிய தயாரிப்பு ஒன்றை கடந்த மாதம் அறிமுகம் செய்துள்ளது. ஒகாயா நிறுவனம் மோட்டோ ஃபாஸ்ட் என்கின்ற புதிய அதிநவீன எலக்ட்ரிக் ரக இருசக்கர வாகனம் ஒன்றை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. 

இதற்கான முன்பதிவுகளும் தற்பொழுது இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் துவங்கி உள்ளது. சுமார் 2500 முதல் 5000 ரூபாய் வரை முன்பணம் அளித்து இதற்கான முன்பதிவுகளை செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

குறைந்த விலையில் டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. இந்த விலையில் இப்படியொரு வசதிகளா..

ஏழு வண்ணங்கள்.

ஒகாயா நிறுவனத்தின் இந்த புதிய எலக்ட்ரிக் வகை இருசக்கர வாகனம் cyan, rust orange, red, white, silver, mate green மற்றும் black என்ற 7 நிறங்களில் வருகின்றது. ஆகவே இந்த வாகனத்தை தேர்வு செய்யும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு பெரிய அளவிலான சாய்ஸ் கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு அம்சங்கள் 

மோட்டோ ஃபாஸ்ட் ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிமீ முதல் 130 கிமீ வரை சவாரி செய்யும் திறன் கொன்டது. அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கிமீ முதல் 70 கிமீ வரை இருக்கும் என்றும்ம், இந்த அதிகபட்ச வேகம் மற்றும் சவாரி வரம்பு தினசரி பயன்பாட்டிற்கு போதுமானதாக இருக்கும் என்றும் நம்ப படுகின்றது. மேலும் இந்த ஸ்கூட்டர் 8 டிகிரி கிரேடபிலிட்டிக்கு மதிப்பிடப்பட்டுள்ளது. எல்எஸ்பி பேட்டரி பேக் இருக்கையின் கீழ் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த வாகனத்தில் ஒரு 7 இன்ச் தொடு திறன் கொண்ட டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் ஓடோ மீட்டர், ட்ரிப் மீட்டர், ரைடிங் மோட், நேரம் மற்றும் பேட்டரியின் அளவை காட்டுகின்ற குறியீடுகள். எல்இடி-னால் அமைக்கப்பட்ட முகப்பு விளக்குகள் மற்றும் சமிக்கை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக்குகளும் முன் மற்றும் பின் என்று இரு சக்கரங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. 

அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய கவலை இல்லை.. ஜாய் இ-பைக் வுல்ஃப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்தாச்சு..

அதேபோல சஸ்பென்ஷன் முறையைப் பற்றி பார்க்கும் பொழுது டெலிகோபிக் போர்க் முறை முன் சக்கரங்களிலும் ஷாக் அப்சர்வேர்ஸ் முளை பின் சக்கரங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சந்தையில் இந்த வண்டியின் விலை சுமார் 1,37,000 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!