
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி (Xiaomi) ஸ்ட்ரைடு நிகழ்வில் தனது முதல் மின்சார வாகனத்தை வெளியிட்டுள்ளது. சியோமியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காரான SU7, HyperOS இயங்குதளத்தைக் கொண்ட ஸ்மார்ட்போன்களுடன் இணைத்து பயன்படுத்தும் வசதி கொண்டது.
சியோமியின் இந்த முதல் மின்சார கார் குறித்த அறிவிப்பு அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. நிறுவனத்தின் சி.இ.ஓ. லீ ஜுன் ட்விட்டரில் இந்தக் காரின் வெளியீடு குறித்து புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்திருக்கும் படத்தில், மிச்செலின் டயர்களுடன் இணைக்கப்பட்ட ஐந்து-ஸ்போக் அலாய் வீல்களுடன் சாம்பல் நிறத்தில் இந்த கார் தோற்றம் அளிக்கிறது.
வெளியீட்டு நிகழ்வில் பேசிய ஜுன், இந்த கார் எலான் மஸ்க்கின் டெஸ்லா காரின் அமைப்பால் ஈர்க்கப்பட்டு இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். அதன்படி, இந்தக் காரின் பக்கவாட்டு கண்ணாடியில் டெஸ்லா காரைப் போன்ற கேமராவும் உள்ளது.
ரூ.38 ஆயிரம் தள்ளுபடி.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு குட் நியூஸ்..!
விழாவின்போது, உலகின் முதல் ஐந்து வாகன உற்பத்தியாளர்களில் ஒருவராக சியோமி வளர வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டிருப்பதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
சியோமி நிறுவனம் Xiaomi SU7, Xiaomi SU7 Pro மற்றும் Xiaomi SU7 Ultra என மூன்று வெவ்வேறு மாடல்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேசிக் Xiaomi SU7 மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 210 கிமீ வேகத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் SU7 மேக்ஸ் மணிக்கு 265 கிமீ வேகம் வரை வழங்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
காரின் விலை மற்றும் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் போன்ற வேறு எந்த விவரங்களையும் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. இந்தக் கார் வரும் மாதங்களில் சீன சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023ம் ஆண்டில் சக்கைபோடு போட்ட டாப் 5 கார்கள் இதுதான்.. விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!