700 ரூபாய்க்கு கார் ஆர்டர் செய்த சின்னப் பையன்! வைரலான ஆனந்த் மஹிந்திரா ரியாக்‌சன்!

Published : Dec 26, 2023, 10:03 PM ISTUpdated : Dec 26, 2023, 10:06 PM IST
700 ரூபாய்க்கு கார் ஆர்டர் செய்த சின்னப் பையன்! வைரலான ஆனந்த் மஹிந்திரா ரியாக்‌சன்!

சுருக்கம்

நொய்டாவைச் சேர்ந்த சீகு என்ற சிறுவன் வீடியோ மூலம் ஆனந்த் மஹிந்திராவிடம் 700 ரூபாய்க்கு மஹிந்திரா தார் வேண்டும் என்று கேட்டிருக்கிறான். 

700 ரூபாய்க்கு கார் ஆர்டர் செய்த சின்னப் பையனுக்கு ஆனந்த் மஹிந்திரா கூறிய பதில் ட்விட்டரில் வைரலாகி இருக்கிறது. அதிக அளவில் பகிரப்படும் வீடியோவில் அந்தச் சிறுவன் கேட்ட கேள்வி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நொய்டாவைச் சேர்ந்த சீகு என்ற சிறுவன் வீடியோ மூலம் ஆனந்த் மஹிந்திராவிடம் 700 ரூபாய்க்கு மஹிந்திரா தார் வேண்டும் என்று கேட்டிருக்கிறான். மஹிந்திராவின் தார் மற்றும் எக்ஸ்யூவி700 ஆகிய இரண்டு கார்களும் ஒன்று என நினைத்து அந்தச் சிறுவன் இப்படிக் கேள்வி எழுப்பியுள்ளான்.

திருச்சி பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா! ஒரே மேடையில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!

ஆனால், அந்தச் சிறுவன் மழலைப் பேச்சில் மஹிந்திரா கார் வேண்டும் என்று கேட்டது அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் பையனின் பேச்சில் அசந்துபோன ஆனந்த் மஹிந்திராவும் ட்விட்டரில் பதில் கூறியிருக்கிறார்.

"700 ரூபாய்க்கு மஹிந்திரா தார் வாகனத்தை விற்பனை செய்தால், என் கம்பெனி திவால் ஆகிவிடும்" என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார். தனது நண்பர் சூனி தாராபோரேவாலா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோவுக்கு ஆனந்த் மஹிந்திரா இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

மஹிந்திரா கார் வாங்க ஆசைப்பட்ட சிறுவன் சீகு ரொம்ப ஆக்டிவாக இதுபோன்ற வீடியோக்களை பகிர்ந்து வருவதும் நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது.

சீகு வாங்க விரும்பிய மஹிந்திரா தார் கார் 2020ஆம் ஆண்டு அறிமுகமானது. இந்தக் கார் இப்போது ரூ.10.98 லட்சம் முதல் ரூ.16.94 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தக் கார் மாருதி சுஸுகி ஜிம்னி காருக்குப் போட்டியாகப் பார்க்கப்படுகிறது.

அப்பவே காந்தி சொன்னார்... வெள்ள நிவாரணப் பணிகளில் உதவிய மக்களுக்கு முதல்வர் பாராட்டு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Best 7 Seater Cars : பெரிய ஃபேமிலிக்கு ஏற்ற சீப் அண்ட் பெஸ்ட் 7 சீட்டர் கார்கள் என்னென்ன?
Best Electric Cycles for Women: பெண்களுக்கு ஏற்ற பெஸ்ட் எலக்ட்ரிக் சைக்கிள்கள்! விலை, ரேஞ்ச், மாடல் முழு விவரம்