டொயோட்டாவின் புதிய லேண்ட் க்ரூஸர் காருக்கு இருக்கும் வரவேற்பு காரணமாக மீண்டும் விற்பனைக்கு வரும்போது கூடுதல் கார்களைக் களமிறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
டொயோட்டா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த புதிய லேண்ட் க்ரூஸர் கார் விற்பனைக்கு வந்த அரை மணிநேரத்திலேயே விற்று தீர்ந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார்களில் ஒன்று லேண்ட் க்ரூஸர் (Land Cruiser). இந்த காரின் புதிய வெர்ஷனை டொயோட்டா நிறுவனம் அண்மையில் விற்பனைக்குக் கொண்டுவந்தது. முதல் கட்டமாக ஜெர்மனியில் சுமார் ஆயிரம் கார்களை விற்பனைக்குக் கொண்டுவந்தது.
இந்த ஆயிரம் கார்கள் விற்பனை தொடங்கிய அரை மணிநேரத்தில் விற்று தீர்ந்துவிட்டன. சில மாதங்களுக்கு முன் ஜெர்மனியில் நடைபெற புஷ் டாக்சி நிகழ்ச்சியில் தான் இந்தக் கார் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. அதில் இருந்து இந்தக் காருக்கு அந்நாட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
முதல் 1000 கார்களுக்கான புக்கிங் டிசம்பர் 21ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கியது. 8.29-க்குள் அனைத்து கார்களும் புக் செய்யப்பட்டுவிட்டன. முதல் கட்ட விற்பனை வேகமாக முடிந்துவிட்ட நிலையில், மீண்டும் இந்தக் காரை விற்பனைக்குக் கொண்டுவர டோயோட்டா ஆயத்தமாகி வருகிறது.
புதிய லேண்ட் க்ரூஸர் காருக்கு இருக்கும் வரவேற்பு காரணமாக மீண்டும் விற்பனைக்கு வரும்போது கூடுதல் கார்களைக் களமிறக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், டொயோட்டா நிறுவனத்திடம் இருந்து அடுத்த விற்பனை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை.
எக்சிகியூட்டீவ், டெக் மற்றும் ஃபர்ஸ்ட் என மூன்று மூன்று விதமான எடிசன்களுடன் புதிய லேண்ட் க்ரூஸர் காரை டொயோட்டா விற்பனை செய்கிறது. இதுவரை புக் செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 2024ஆம் ஆண்டின் மத்தியில் தான் டெலிவரி செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.