மாற்று எரிபொருளுக்கான தேடலில், எலக்ட்ரிக் வானங்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றன. அரசும் அதிகப்பட்ச வரிச்சலுகைகளை வழங்கி வருகிறது. EV Car-களுக்கான இந்திய சந்தையில் 5% வரிச் சலுகை அடுத்த 10 ஆண்டுகளுக்கும் நீடித்தால் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்ய தயராக இருப்பதாக Mercedes Benz நிறுவனம் அறிவித்துள்ளது.
முக்கிய எரிபொருட்களான பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, தட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் காரணமாக EV கார் மற்றும் பைக் பயன்பாட்டில் முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான Mercedes Benz மேலும், 6 புது வித EV கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. EV கார்கள் மீதான 5% GST-யின் வரிச் சலுகை அடுத்த 10 ஆண்டுகளுக்கும் நீடித்தால் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்யத் தயார் என Mercedes India MD & CEO சந்தோஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
மத்திய மாநில அரசுகளின் தற்போதைய EV வரிச்சலுகை எங்களைப் போன்ற கார் உற்பத்தியாளர்களுக்கு புது நம்பிக்கையை அளிப்பதாக தெரிவித்துள்ளார். புனேவில் அமைந்துள்ள Mercedes Benz தொழிற்சாலை மூலம் EQS, EQB MPV மற்றும் EQE SUV ஆகிய EV கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், தொழிற்சாலையில், EQA இல், EQS Mach back மற்றும் எலக்ட்ரிக் G க்ளாஸ் கார்களை பெறுவதற்கான திட்டங்களை உறுதிப்படுத்தும் பணியில் உள்ளது. .
330 கிமீ வரை மைலேஜ்.. உலகின் முதல் சிஎன்ஜி பைக்.. பஜாஜின் ஃப்ரீடம் 125.. விலை ரொம்ப கம்மி!
EV Car-களுக்கான சார்ஜிங் பாயிண்ட் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள சந்தோஷ் ஐயர், தொலைதொடர்புதுறையை போன்று மொபைல் டவர் பகிர்வு போன்ற பரஸ்பர ஒப்பந்தத்தில் செயல்படுத்தப்பட வேண்டும் இதற்கு மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களும், சேவை வழங்குநர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
4 புதிய கார்கள்.. 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஜூலை 24 தேதி குறித்த BMW.. இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா.?
கார்பன் நியூட்ராலிட்டியை நோக்கி இந்தியா வேகமாக முன்னேரும் போது, EV வகை கார்களை அரசு தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். கார்பன் இல்லாத சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க மின்மயமாக்கல் ஒன்றே தீர்வு என சந்தோஷ் ஐயர் தெரிவித்தார்.
செமயான அம்சங்கள்.. அசத்தலான மைலேஜ்.. இந்தியாவின் டாப் 5 எஸ்யூவிகள் இதுதான்.. முழு லிஸ்ட் இதோ!