இந்த பைக்கிற்கு 'ப்ரூஸர்' என்று பெயரிட பரிசலீக்கப்பட்டது. பிறகு 'ஃப்ரீடம்' என்ற பெயர்தான் மிகவும் பொருத்தமானதாகத் தெரிகிறது என்று முடிவு செய்துள்ளனர்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உலகின் முதல் CNG + பெட்ரோலில் இயங்கும் மோட்டார்சைக்கிளை ஜூலை 5ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. பைக் ஃப்ரீடம் 125 என்ற பெயரில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.
பஜாஜ் ஆட்டோ இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் புதிய பஜாஜ் சி.என்.ஜி. பைக் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளன. பஜாஜ் புதிய பைக்கில் அதிக எரிபொருள் சேமிப்பு திறனுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
undefined
பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் 'எல்எம்எல் ஃப்ரீடம்' என்ற மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு வந்தது. ஆனால் அதற்கும் பஜாஜ் ஃப்ரீடம் பைக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. இதற்கு முன்பு இந்த பைக்கிற்கு 'ப்ரூஸர்' என்று பெயரிட பரிசலீக்கப்பட்டது. பிறகு 'ஃப்ரீடம்' என்ற பெயர்தான் மிகவும் பொருத்தமானதாகத் தெரிகிறது என்று முடிவு செய்துள்ளனர்.
வெறும் 1000 ரூபாய் சேமித்தால் போதும்! மகள் மேஜராகும் போது ரூ.15 லட்சம் கிடைக்கும்!
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பஜாஜ் இந்த பைக்கிற்கு மராத்தான், கிளைடர், ட்ரெக்கர் மற்றும் ஃப்ரீடம் என பல பெயர்களைப் பரிசீலனை செய்ததாகத் தகவல் வெளியானது.
பெயரில் உள்ள '125' என்பது என்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட்டைக் குறிக்கிறது. இது ஏற்கனவே உள்ள என்ஜினா, முற்றிலும் புதிய எஞ்சினா என்பது இன்னும் தெரியவில்லை. பஜாஜ் ஃப்ரீடம் 125 இரண்டு மாடல்களில் வருவதற்கு வாய்ப்புள்ளது. வழக்கமான மாடலுடன் பிரீமியம் மாடலும் இருக்கும் எனத் தெரிகிறது.
இந்த பைக்கிற்கு பலவிதமான கலர் வேரியண்ட்களுடன் வர வாய்ப்புள்ளது. இந்த பைக் பலமுறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பஜாஜ் ஆட்டோ கூறியுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் பெட்ரோலில் இருந்து சிஎன்ஜிக்கு மாறுவதற்கு எளிமையான ஒரு பட்டன் இருக்கும் என்று தெரிகிறது. வட்டமான எல்இடி ஹெட்லைட் மற்றும் அதிக இடவசதி கொண்ட பிளாட் இருக்கை ஆகியவையும் உள்ளன.
கமல் வாங்கிய காஸ்ட்லி சொத்துகள்! மேன்ஷன் முதல் கார் வரை... எல்லாமே உலகத்தரம்!