Jawa Bikes : ஜாவா 350 வாங்குற பிளான் இருக்கா? இதான் ரைட் டைம் பாஸ் - அதிரடி விலை குறைப்பை அறிவித்த Jawa!

Ansgar R |  
Published : Jun 28, 2024, 06:19 PM IST
Jawa Bikes : ஜாவா 350 வாங்குற பிளான் இருக்கா? இதான் ரைட் டைம் பாஸ் - அதிரடி விலை குறைப்பை அறிவித்த Jawa!

சுருக்கம்

Jawa 350 : பிரபல ஜாவா நிறுவனம் தனது ஜாவா 350 பைக்கிற்கு இப்பொது அசத்தல் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.

பைக் தயாரிப்பில் "கிளாசிக் லெஜெண்ட்ஸ்"என்று அனைவராலும் அழைக்கப்படும் ஜாவா நிறுவனம், தனது புதிய ஜாவா 350 பைக்கில் மூன்று புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் இரு மாடல்கள் அலாய் வீல்களுடன் வருகின்றன. ஆரம்பத்தில் அந்த பைக்குகளின் விலை சுமார் 2.15 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்தது. 

இந்நிலையில் விற்பனையை அதிகரிக்க ஒரு மாபெரும் முடிவாக ஜாவா நிறுவனம் தனது புதிய 350 பைக்குகளுக்கு 16,000 ரூபாய் தள்ளுபடி வழங்கியுள்ளது. ஆகவே இதுவரை 2.15 என்ற விலையில் விற்பனையான இந்த பைக், இனி 1.99 லட்சத்திற்கு விற்பனைக்கு வருகின்றது. மேலும் இந்த சலுகை எவ்வளவு காலம் இருக்கும் என்பது குறித்த அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. 

அதிக ரேஞ்ச் மட்டுமா.. அதுக்கும் மேல.. இந்தியாவுக்கு ரொம்ப புதுசு.... BGauss RUV350 E-Scooter எப்படி இருக்கு?

மேலும் ஜாவா நிறுவனம் இந்த பைக்கில், மூன்று புதிய வண்ணங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது என்பது தான் உச்சகட்ட சுவாரசியம். அப்சிடியன் பிளாக், கிரே மற்றும் டீப் ஃபாரஸ்ட் ஆகிய நிறங்களில் கிடைக்கும். அதே நேரம் ஜாவா 350, தனது இயல்பான வண்ணங்களான மெரூன், கருப்பு, வெள்ளை மற்றும் மிஸ்டிக் ஆரஞ்சு நிறங்களில் ஸ்போக் மற்றும் அலாய் வீல்களுடன் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வண்ணங்கள் மற்றும் அலாய் சக்கரங்கள் பொறுத்தப்பட்டிருந்தாலும், இந்த மோட்டார் சைக்கிள் இயந்திர ரீதியாக எந்த மாற்றமும் பெறாது. ஆனால் அந்த அலாய் சக்கரங்களுடன் வரும் பைக்கின் புகைப்படத்தை இதுவரை அந்த நிறுவனம் வெளியிடவில்லை. ஜாவா 350 ஆனது 7,000ஆர்பிஎம்மில் 22.5எச்பி பவரையும், 5,000ஆர்பிஎம்மில் 28.1என்எம் ஆற்றலையும் வழங்கும் 334சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. ஜாவா தற்போது "பேஸ் ஸ்போக் வீல்" வகையை ரூ.1.99 லட்சத்திற்கும் மற்றும் அலாய் வீல் வேரியன்ட் ரூ.2.08 லட்சத்திற்கும் விற்பனை செய்து வருகிறது. 

ரூ. 1.5 லட்சம் வரை தள்ளுபடி.. Maruti Suzuki அறிவித்த சலுகை.. இதுதான் கடைசி தேதி.. உடனே முந்துங்க!

PREV
click me!

Recommended Stories

47 மாதத்தில் 6 லட்சம் விற்பனை.. Tata Punch ஏன் எல்லாருக்கும் பிடிக்குது தெரியுமா?
2 மில்லியன் உற்பத்தி மைல்கல்.. 36% வளர்ச்சி.. Creta, செல்டோஸ் இல்ல… இதுதான் ராஜா!