Latest Videos

புது கார் வாங்க ரெடியா? TATAவிற்கு வலு போட்டியான Volkswagen - 2 முக்கிய கார்களுக்கு 1.80 லட்சம் வரை தள்ளுபடி!

By Ansgar RFirst Published Jun 9, 2024, 5:09 PM IST
Highlights

Volkswagen New Offer : கோடை காலம் முடியவுள்ள நேரத்தில் அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களுடைய சிறந்த தள்ளுபடிகளை வெளியிட்டு வருகின்றனர்.

அண்மையில் பிரபல டாடா நிறுவனம் தங்களது கார்களுக்கு 80,000 ரூபாய் முதல் சுமார் 1.20 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கியது. இனமும் அந்த சலுகைகள் அமலில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டாடா நிறுவனத்திற்கு போட்டியாக தனது இரு முக்கிய கார்களுக்கு சுமார் 1.80 லட்சம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. 

ஃபோக்ஸ்வேகனின் முதன்மை SUVயான Tiguan இந்த ஜூன் மாதத்தில் பெரும் தள்ளுபடியில் மக்களால் வாங்க முடியும். தற்போது MY23ல்(Model Year 2023) தயாரிக்கப்பட்ட மாடல்கள், இந்த மாதம் ரூ.3.40 லட்சம் மதிப்புள்ள பலன்களுடன் கிடைக்கிறது. இதில் ரூ.75,000 வரை ரொக்கத் தள்ளுபயும், ரூ.75,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும். 

1 லிட்டருக்கு 73 கிமீ மைலேஜ் கொடுக்கும் சூப்பரான பைக்குகள்.. விலையும் ரொம்ப கம்மி தான் - முழு லிஸ்ட் இதோ!

அதே நேரம் நான்கு வருட சேவைத் தொகுப்பு (ரூ. 90,000) மற்றும் ரூ.1 லட்சம் வரை மதிப்புள்ள பெருநிறுவனப் பலன்கள் ஆகியவை இதில் அடங்கும். அதே போல MY24 Tiguan கார்களுக்கு ரூ. 50,000 வரை ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ. 50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. அதே போல MY23 Volkswagen Taigun 1.0-லிட்டர் TSI மடலுக்கு இந்த மாதம் ரூ.1.80 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. 

Tiguan MY23 மாடல்களுக்கு மட்டும் ரூ.50,000 வரை ரொக்கத் தள்ளுபடி, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.20,000 லாயல்டி போனஸ் மற்றும் ரூ.50,000 கூடுதல் தள்ளுபடி ஆகியவை கிடைக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

 

மேலும் Volkswagen Virtus 1.0 TSI கார்கள் தற்போது ரூ. 1.05 லட்சம் மதிப்புள்ள பலன்களுடன் கிடைக்கிறது. இதில் ரூ. 75,000 ரொக்க தள்ளுபடி, ரூ. 20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 20,000 லாயல்டி போனஸ் ஆகியவை அடங்கும். Virtus 1.5 GT வகைகள் எக்ஸ்சேஞ்ச் மற்றும் லாயல்டி போனஸுடன் மட்டுமே கிடைக்கும்ஏ என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறைந்த விலை.. அதிக மைலேஜ்.. பஜாஜின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்தாச்சு.. விலை எவ்வளவு தெரியுமா?

click me!