- Home
- Gallery
- 1 லிட்டருக்கு 73 கிமீ மைலேஜ் கொடுக்கும் சூப்பரான பைக்குகள்.. விலையும் ரொம்ப கம்மி தான் - முழு லிஸ்ட் இதோ!
1 லிட்டருக்கு 73 கிமீ மைலேஜ் கொடுக்கும் சூப்பரான பைக்குகள்.. விலையும் ரொம்ப கம்மி தான் - முழு லிஸ்ட் இதோ!
ஒரு லிட்டருக்கு 73 கிமீ மைலேஜ் கொடுக்கும் சூப்பர் மைலேஜ் பைக் பற்றியும், அதன் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

Best Mileage Bikes
நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப், ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸின் சமீபத்திய பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.82,911 (எக்ஸ்-ஷோரூம்), அதாவது ரூ. 3 ஆயிரம் வரை அதிக விலையில் கிடைக்கிறது என்றார்.
Hero Splendor Plus
இந்த பதிப்பு மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது - மேட் கிரே, க்ளோஸ் பிளாக் மற்றும் க்ளோஸ் ரெட். இந்த பைக்கின் எஞ்சின் 4-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வருகிறது. இது i3s (Idle Stop Start System) தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.
Mileage Bikes
இந்த பைக்கில் 9.8 லிட்டர் எரிபொருள் டேங்க் உள்ளது. மேலும் இந்த பைக் லிட்டருக்கு 73 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது. சைட்-ஸ்டாண்ட் இண்டிகேட்டர், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் உடன் வருகிறது.
Hero Splendor Plus Xtec 2.0
டிரிப் மீட்டர், ஃப்யூவல் இண்டிகேட்டர், அழைப்பு மற்றும் செய்தி எச்சரிக்கைகளுடன் கூடிய புளூடூத் இணைப்பு, யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட் போன்ற பல அம்சங்களுடன் இந்த பைக் வருகிறது.
டாடாவின் மலிவான மின்சார ஸ்கூட்டர் வரப்போகுது.. இந்தியாவே அதிரப்போகுது.. விலை எவ்வளவு?