டொயோட்டாவின் தரமான 3 புதிய கார்கள்; 1 லட்சம் வரை Year End Offer தராங்க - மிஸ் பண்ணிடாதீங்க!

Ansgar R |  
Published : Nov 13, 2024, 09:56 PM IST
டொயோட்டாவின் தரமான 3 புதிய கார்கள்; 1 லட்சம் வரை Year End Offer தராங்க - மிஸ் பண்ணிடாதீங்க!

சுருக்கம்

Toyota Cars : பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா தனது 3 புதிய பெஸ்டிவல் எடிஷன் கார்கள் மற்றும் அதன் உதிரி பாகங்களுக்கு 1 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது.

டொயோட்டா சில மாதங்களுக்கு முன்பு தனது Glanza, Taisor மற்றும் Hyryderன் ஆகிய கார்களின் ஃபெஸ்டிவல் லிமிடெட் எடிஷன் வகைகளை, இலவச டீலர் அளவிலான துணைக்கருவிகளுடன் அறிமுகப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. இப்போது, ​​டொயோட்டா அதே கார்களுக்கு ஆக்சஸரீஸ் பேக்கேஜ்களை வழங்க தயாராகியுள்ளது. Glanza, Taisor மற்றும் Hyryder ஆகிய கார்களுக்கு Year End Offerகளின் ஒரு பகுதியாக தள்ளுபடி விலையில் வழங்குகிறது. 

மேலே குறிப்பிட்ட இந்த மூன்று கார்களும் முக்கியமாக டீலர்-லெவல் ஆக்சஸரிகளான கிரில்ஸ் மற்றும் பம்பர்களுக்கான குரோம் சிறப்பம்சங்கள், 3டி டோர் மேட்கள், டோர் விசர்கள் மற்றும் ஃபுல் பாடி கவர்கள் போன்றவைகளுடன் வருகின்றன. க்ளான்ஸாவின் அனைத்து டிரிம்களிலும், டெய்சரின் லோயர்-ஸ்பெக் E, S மற்றும் S+ டிரிம்களிலும், அர்பன் க்ரூஸர் ஹைரைடரின் S, G மற்றும் V டிரிம்களிலும் இந்த ஆக்சஸரீஸ்களைப் பெறலாம். இருப்பினும், இந்த கார்களின் CNG வகைகளில் இந்த சலுகைகள் கிடைக்காது என்பதை நினைவில்கொள்ளவேண்டும். 

300 கிமீ வேகத்தில் செல்லும் டாடா நானோ எலக்ட்ரிக் கார்.. விலை ரொம்ப கம்மியா இருக்கே!

க்ளான்ஸாவில் உள்ள அக்சஸரீ பேக்கேஜ் தொகுப்பு ரூ. 17,381க்கு கிடைக்கிறது ஏற்கனவே அது சுமார் ரூ. 20,567க்கு விற்பனையாகி வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் டொயோட்டா Taisorன் அக்சஸரீ பேக்கேஜின் விலை ரூ. 17,931க்கு விற்பனையாகிறது. அது ஏற்கனவே ரூ. 20,160க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. அதே போல டொயோட்டா ஹைரைடரின் துணைக்கருவிகள் தொகுப்பு ரூ. 50,817க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அது ஏற்கனவே விற்பனையாகி வந்த விலையிலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகிறது. மேலும் இந்த அதிரடி விலை குறைப்பு டிசம்பர் 31, 2024 வரை மட்டுமே பொருந்தும்.

இந்த ஆக்சஸெரீகள் தவிர, வாடிக்கையாளர்கள் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள பிற பிரத்யேக ஆண்டு இறுதி சலுகைகளையும் பெறலாம். இருப்பினும் இந்த நன்மைகளின் சரியான தன்மையை பற்றி டொயோட்டா இன்னும் முழுமையாக குறிப்பிடவில்லை. இயர் எண்டு சேல்களை அதிகரிக்கவே இந்த நடவடிக்கையை டொயோட்டா எடுத்துள்ளது.

ஒரு ரூபாய் கூட வரி கட்ட வேண்டாம்: ரூ.7000 அதிரடி தள்ளுபடி - அசத்தும் விலையில் Zeal Plus Electric Scooter

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.13,300 மதிப்புள்ள இலவச ஆக்சஸரீஸ்.. Scrambler 400 X வாங்குபவர்களுக்கு ஃப்ரீ..!
30 நிமிடத்தில் 70% சார்ஜ்.. குடும்பங்களுக்கான 7 சீட்டர் EV.. VinFast புதிய மாடல்!