ரெனால்ட் முதல் மாருதி சுசூகி வரை; பட்ஜெட் கார்களுக்கு 70,000 வரை சூப்பர் ஆஃபர் - வாங்க பார்க்கலாம்!

Ansgar R |  
Published : Nov 11, 2024, 08:09 PM IST
ரெனால்ட் முதல் மாருதி சுசூகி வரை; பட்ஜெட் கார்களுக்கு 70,000 வரை சூப்பர் ஆஃபர் - வாங்க பார்க்கலாம்!

சுருக்கம்

Cars in Offer : இந்த நவம்பர் மாதத்தில் ரெனால்ட் மற்றும் மாருதி போன்ற முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதிரடி விலை குறைப்பில் கார்களை விற்பனை செய்துவருகின்றனர்.

இந்த நவம்பர் மாதத்தில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய மலிவு விலை கார்களுக்கு சுமார் 70 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. மாருதி நிறுவனத்தின் ஆல்டோ கே 10 மற்றும் எஸ் ப்ரெஸ்ஸோ உள்ளிட்ட கார்களுக்கு 30,000 ரூபாய் தள்ளுபடி வழங்கி வருகின்றது. மேலும் மாருதி நிறுவனம் தன்னுடைய பல பட்ஜெட் மாடல் கார்களில் தான் பெரிய அளவிலான சலுகையில் இந்த நவம்பர் மாதத்தில் தொடர்ச்சியாக விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல பிரபல ரெனால்ட் நிறுவனம் தங்களுடைய Kwid ரக காரை சுமார் 15,000 ரூபாய் தள்ளுபடியில் வழங்குகிறது. தனது RXE மற்றும் RXL உள்ளிட்ட மாடல்களுக்கு இந்த ஆஃபர் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு மாடல்களும் முறையே 4,54,500 ரூபாய்க்கு மற்றும் 4,84,500 ரூபாய்க்கு இப்போது விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மாருதி சுசுகி நிறுவனத்தின் செலிரோ காருக்கு கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரூபாய் விலை குறைக்கப்பட்டு, தற்பொழுது 5,06,495 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. 

மைலேஜ்னா இப்படி இருக்கனும்: 160 கிமீ பயணம்: ரூ.12000க்கு கிடைக்கும் Ather Rizta Z

அண்மையில் ரெனால்ட் நிறுவனம் தன்னுடைய புதிய Triber காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இப்பொழுது இந்த ரக கார்களில் உள்ள இரண்டு மாடல்களுக்கு சுமார் 15,000 வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. தள்ளுபடி போக இந்த இரண்டு வகையான கார்களும் சுமார் 5,84,500 ரூபாய்க்கும், 6,65,500 ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல ரெனால்ட் நிறுவனத்தின் கிகேர் ரக கார்களுக்கும் சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுப்படிக்கு பிறகு இந்த காரின் விலை சுமார் 5,79,000 என்பது குறிப்பிடத்தக்கது. 

மாருதி சுசுகி நிறுவனத்தை பொறுத்தவரை கடந்த பல ஆண்டுகளாகவே மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்போடு வலம் வந்து கொண்டிருக்கும் இரண்டு கார்கள் தான் டிசையர் மற்றும் பலேனோ. இந்த இரண்டு கார்களுக்கும் முறையே 15,000 மற்றும் 45 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. தள்ளுபடிகள் போக மாருதி சுசுகி டிசையர் கார் 6,46,000 ரூபாய்க்கும் பலேனோ கார் 7,14,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. 

அதேபோல இந்திய அளவில் மிகப் பெரிய அளவில் புகழ்பெற்ற மகேந்திரா நிறுவனத்தின் பாலெரோ நியோ தற்பொழுது சுமார் 70,000 ரூபாய் தள்ளுபடி விலையில் விற்பனை ஆகிவருகின்றது. ஏற்கனவே சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி வந்த இந்த கார் தற்பொழுது 9,24,600 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.    

பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங்: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாஸ் எண்ட்ரி கொடுத்த Maruti Dzire Car

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.57,750க்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. டெலிவரி செய்பவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. உடனே வாங்குங்க
ரூ.1 லட்சம் ஆஃபர்.. டேடோனா 660-க்கு அதிரடி தள்ளுபடி.. பைக் ரசிகர்களுக்கு மாபெரும் சலுகை