
உலக அளவில் சொகுசு கார்களை தயாரிக்கும் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்று தான் "பென்ட்லி". அந்த நிறுவனம் தனது முதல் மின்சார SUV காரை எதிர்வரும் 2026ம் ஆண்டு உலக சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் பென்ட்லி நிறுவனத்தால் வெளியிடப்படும் 10 EV மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் மாடல்களில் ஒன்றாக இருக்கும் அந்த புதிய SUV கார். 2026ம் ஆண்டு வெளியாகவுள்ள அந்த காரின் ரூஃப்லைன் பற்றிய முன்னோட்ட ஓவியத்துடன், பென்ட்லி ஒரு விஷயத்தை விவரித்துள்ளது.
அதாவது 2026ம் ஆண்டு வெளிப்படுத்தப்படும், "உலகின் முதல் உண்மையான சொகுசு நகர்ப்புற SUV", இது "முற்றிலும் புதிய பிரிவை உருவாக்கும்”. இந்த மாடல் பென்ட்லியின் "க்ரூ" தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும்" என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த புதிய EV ஆனது ஒரு "செக்மென்ட்-ஸ்ட்ராட்லிங் கிராஸ்ஓவர்" ஆக இருக்கும் என்று பிரபல செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தி அறிக்கை கூறுகின்றது. இந்த புதிய கார் ஐந்து மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக இருக்கும். இது இன்றுவரை பென்ட்லியின் மிகச்சிறிய வாகனமாகவும் இருக்கும்.
முழு சார்ஜ் செய்தால் 70 கிமீ போகலாம்.. ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை?
பென்ட்லி வடிவமைப்பு தலைவர் ராபின் பேஜ் அளித்த தகவலின்படி "இந்த புதிய மாடல் கார், பென்ட்லீ நிறுவனத்தின் வரலாற்று சிறப்புமிக்க வடிவமைப்பு குறிப்புகளை தக்கவைத்துக்கொள்ளும் அதே வேளையில், கம்பஷன் என்ஜின் அல்லாத வகையில் புதிய முன்-இறுதி வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார். பென்ட்லியின் முல்லினர் தனிப்பயனாக்குதல் பிரிவின் விரிவான சலுகைகள் மாடலை உண்மையான சொகுசு காராக மாற்றுவதற்கு முக்கியமாக இருக்கும்.
உலக அளவில் சொகு கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் பென்டலி நிறுவனம், 1888 ஆம் ஆண்டு இங்கிலாந்து நகரில் தொடங்கப்பட்ட து. அதன் பிறகு 1924 ஆம் ஆண்டு முதல் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் இந்த கார் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்ற நிறுவனமாக இருந்த போதிலும், கடந்த 2020லில் இருந்துதான் இந்தியாவில் இந்த கார் பெரிய அளவில் புகழ்பெற்றுள்ளது.
எல்லா டயர்களும் ஏன் கருப்பு கலரா இருக்குன்னு தெரியுமா?