மாருதி சுசூகி; 73,000 வரை அதிரடியாக குறைக்கப்பட்ட விலை - எந்தெந்த கார்களுக்கு தெரியுமா?

Ansgar R |  
Published : Nov 10, 2024, 07:55 PM IST
மாருதி சுசூகி; 73,000 வரை அதிரடியாக குறைக்கப்பட்ட விலை - எந்தெந்த கார்களுக்கு தெரியுமா?

சுருக்கம்

Maruti Suzuki : வருடம்தோறும் சிறந்த பல ஆஃபர்களை அறிவித்து வருகின்றது பிரபல மாருதி சுசூகி நிறுவனம். அந்த வகையில் இந்த நவம்பர் மாதத்திலும் தனது கார்களுக்கு சில சலுகைகளை வழங்குகிறது.

மாருதி சுசூகி நிறுவனத்தின் அதிகம் விரும்பப்படும் பட்ஜெட் ரேஞ்சு கார் தான் Alto K10. இந்த நவம்பர் மாதத்தில் ஆல்டோ கே10 காரை வாடிக்கையாளர்கள் சுமார் 43,302 ரூபாய் வரை சலுகையில் வாங்க முடியும். கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ. 15,000மும் கிடைக்கவுள்ளது.  ஆகா சுமார் 4.9 லட்சம் முதல் துவங்கும் ஆல்டோ கே 10 காரை சுமார் 61,402 ரூபாய் சலுகை விலையில் நீங்கள் வாங்க முடியும். மேலும் உதிரி பாகங்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படுகிறது.

அதே போல் Maruti Suzuki S-Presso காரும் கிட்டத்தட்ட ஆல்டோ கே10 போன்ற இதே பலன்களுடன் ரூ. 67,953 வரை தள்ளுபடியில் கிடைக்கிறது. அதாவது ரூபாய் 49,853 நுகர்வோர் சலுகை, எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ. 15,000 மற்றும் கிராமப்புற விற்பனை சலுகை ரூ. 3,100 என்று அனைத்தையும் சேர்த்து சுமார் 67,953 ரூபாய்க்கு நீங்கள் இந்த காரை வாங்க முடியும். அதிலும் குறிப்பாக S-Presso VXi (ட்ரீம் பதிப்பு) அதிக சலுகையைப் பெறுகிறது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரும் சுமார் 4.7 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து துவங்குகிறது. 

55 கி.மீ. மைலேஜ்... பட்ஜெட் ஸ்கூட்டரில் பெஸ்டு ஹோண்டா ஆக்டிவா 7G!

மேலே கூறிய இந்த சலுகைகள் தவிர, மாருதி சுசூகி நிறுவனத்தின் வேகன்ஆர் மற்றும் செலிரியோ உள்ளிட்ட கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரிய சலுகைகளை கிடைக்கிறது. முறையே வேகன்ஆர் காருக்கு ரூ. 53,100 வரை தள்ளுபடியும், செலிரியோ ரக கார்களுக்கு ரூபாய் 73,084 தள்ளுபடியும் கிடைக்கும். அதே போல வேகன்ஆர் வால்ட்ஸ் எடிஷன் மற்றும் செலிரியோ டிரீம் எடிஷன் ஆகியவை அதிகபட்ச சலுகைகளுடன் கிடைக்கின்றன. பழைய ஸ்விஃப்ட் இந்த தள்ளுபடி திட்டத்தின் கீழ் ரூ. 25,000 வரையிலான குறிப்பிடத்தக்க பலன்களுடன் கிடைக்கிறது. 
 
மறுபுறம், புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார்கள் சுமார் ரூ.72,600 வரை சேமிப்புடன் கிடைக்கிறது. மேலும் புதிய ஜென் ஸ்விஃப்ட் கார்களை வாங்கும்போது ரூபாய் 49,990 வரையிலான இலவச கிட்களை வழங்குகிறது. 49,990 கூடுதல் டீலர் சலுகையுடன் ரூ. 14,000 வரையிலான சலுகை கிடைக்கும். விரைவில் புதுப்பிக்கப்பட உள்ள டிசையர் ரூ. 30,000 வரையிலான தள்ளுபடியுடன் கிடைக்கும். மாருதியின் போர்ட்ஃபோலியோவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றான பிரெஸ்ஸா இந்த நவம்பர் மாதத்தில் சுமார் ரூ. 32,000 வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

100 Km மைலேஜ்: 1 ரூபா கூட வரி கட்ட வேண்டாம் - TVS iQube புக் பண்ணீட்டீங்களா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.57,750க்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. டெலிவரி செய்பவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. உடனே வாங்குங்க
ரூ.1 லட்சம் ஆஃபர்.. டேடோனா 660-க்கு அதிரடி தள்ளுபடி.. பைக் ரசிகர்களுக்கு மாபெரும் சலுகை