Diesel SUVs : இப்போதெல்லாம் பெரிய அளவில் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் வகை கார்கள் மட்டுமே அதிக அளவில் விற்பனையாகிறது. ஆனால் இன்றளவும் டீசல் கார்களுக்கு என்று ஒரு தனி மவுசு இருக்கத்தான் செய்கின்றது.
இந்தியாவில் சில இடங்களில் டீசல் கார்கள் மற்றும் SUVகளின் விற்பனை மந்தமாக இருந்தாலும், சில கார் தயாரிப்பாளர்கள் இந்த வாய்ப்பை தொடர்ந்து பயன்படுத்திக்கொள்கின்றனர் என்றே கூறலாம். அந்த வகையில் ஹூண்டாய், மஹிந்திரா, டாடா மற்றும் எம்ஜி மோட்டார் இந்தியா ஆகியவை இன்னும் டீசல் வகை கார்களை விற்பனை செய்கின்றன. மேலும் இந்த கார் தயாரிப்பாளர்கள் தங்களின் சில கார்களை வரும் மாதங்களில் சந்தைக்குக் கொண்டு வருகிறார்கள்.
இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் Mahindra XUV300 facelift இயந்திர ரீதியாக மாறாமல் இருக்கும். அதே 117hp, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மேனுவல் மற்றும் Automatic விருப்பங்களுடன் தொடரும்; ஆனால் 110hp மற்றும் 131hp 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்படுமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்திய சந்தையில் 10 முதல் 15 லட்சம் என்று விலை நிர்ணயம் செய்யப்படலாம்.
undefined
100 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கும் ஹீரோ எலெக்ட்ரிக் பைக்! 30 ஆயிரம் கம்மியா கிடைக்குது!
டாடா நிறுவனம் தனது Cruvv என்ற புதிய காரை விரைவில் வெளியிடவுள்ளது. ஹ்யுண்டாய் மற்றும் ஸ்கோடா நிறுவனத்தின் பல கார்களுக்கு போட்டியாக, டாடா நிறுவனம் இந்த காரை அறிமுகம் செய்யவுள்ளது. LED விளக்குகள், 18 இன்ச் அலாய் வீல்கள், 360 டிகிரி கேமரா மற்றும் பல வசதிகளுடன் இந்த கார் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் 14 முதல் 20 லட்சம் என்று விலை நிர்ணயம் செய்யப்படலாம்.
இந்திய சந்தையில் இப்பொது நல்ல வரவேற்பை பெரும் MG நிறுவனம் தனது Gloster facelift என்ற வாகனத்தை இவ்வருட இறுதியில் அறிமுகம் செய்யவுள்ளது. MGயின் Gloster ஏற்கனவே இந்திய சந்தையில் 4 வருடங்களாக விற்பனையில் உள்ளது, இந்நிலையில் அதன் Facelift மாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் 2WD வடிவத்தில் 161hp உற்பத்தி செய்கிறது. இந்திய சந்தையில் 40 முதல் 44 லட்சம் என்று விலை நிர்ணயம் செய்யப்படலாம்.
கெத்து காட்டும் பஜாஜ்! லேட்டஸ்டு அப்பேட்களுடன் பல்சர் NS125 பைக் மீண்டும் அறிமுகம்!