இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் அப்டேட் ஆகியிருக்கிறது. முழுமையான டிஜிட்டல் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஓடோ மீட்டர், ட்ரிப் மீட்டர், ரெவ் கவுன்ட்டர், பெட்ரோல் லெவல் ரீட்-அவுட் என்று சகல வசதிகளும் உள்ளன.
பஜாஜ் நிறுவனத்தின் பிரபலமான பைக்குளில் ஒன்றான பல்ஸர் பல வேரியண்ட் கிடைக்கின்றன. 125CC இல் மட்டும் 2 வேரியண்ட் இருக்கிறது. அதில் ஒரு வேரியண்ட் ரெகுலர். மற்றொன்று NS125 கடந்த மூன்று வருடம் முன்புதான் அறிமுகமானது. அந்த வேரியண்ட்டில் இப்போது பஜாஜ் நிறுவனம் பல மாறுதல்களைச் செய்துள்ளது.
பழைய ஹாலோஜன் குண்டுபல்புக்குப் பதில் அல்ட்ரா மாடர்ன் எல்இடி டிஆர்எல் லைட் வந்துள்ளது. இதற்கு தண்டர் லைட் எல்.இ.டி என்று சொல்கிறார்கள். லோ ஹைபீம் செட்அப் மூலம் வெளிச்சம் நல்ல பிரகாசமாக இருக்கிறது. ஹெட்லைட் டிசைன் கவர்ச்சிகரமாகவே இருக்கிறது.
வழக்கம் போல ஸ்ப்ளிட் சீட் தான் இருக்கிறது. சீட்டின் பின் பக்கம் பல்சர் பாணியில் ஸ்லிம் டிசைனாக உள்ளது. ஸ்போர்ட்டி தோற்றத்துடன் வீல்பேஸ் குறைவாக இருக்கிறது. அதற்கு ஏற்ப வண்டியின் டிசைன் அமைந்திருக்கிறது.
கூகுள் ப்ளேஸ்டோரில் மேட்ரிமோனி ஆப்ஸ் திடீர் நீக்கம்! சேவைக் கட்டண விவகாரத்தில் அதிரடி!
இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் அப்டேட் ஆகியிருக்கிறது. முழுமையான டிஜிட்டல் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஓடோ மீட்டர், ட்ரிப் மீட்டர், ரெவ் கவுன்ட்டர், பெட்ரோல் லெவல் ரீட்-அவுட் என்று சகல வசதிகளும் உள்ளன.
ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியும் இருக்கிறது. போன் மற்றும் கால் அலெர்ட்களைப் பார்த்துக் கொள்ளலாம். பேட்டரி லெவலும் இதற்குள் உள்ளடங்கி இருக்கிறது. மொபைல் போன் சார்ஜ் செய்ய் USB சார்ஜிங் போர்ட் கொடுத்திருக்கிறார்கள். இவ்வளவு இருந்தும் டர்ன் டர்ன் பை நேவிகேஷன் இல்லை என்ற குறை உள்ளது.
எஞ்சின், சஸ்பென்ஷன் போன்றவை மாற்றம் இல்லாமல் உள்ளன. 125 சிசி, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின், 11.8 bhp பவர், 11Nm டார்க் கொடுக்கும் இந்த பைக் 5 ஸ்பீடு கியர்பாக்ஸைப் பெற்றுள்ளது. முன்னால் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் இருக்கிறது.
புதுப்பிக்கப்பட்ட இந்த பைக்கிற் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5,000 வரை ஏறியிருக்கிறது. புதிய பல்சர் NS125 பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.05 லட்சம். ஆன்-ரோடு விலை ரூ.1.30 லட்சம் வரை இருக்கலாம். இது டிவிஎஸ் ரெய்டர், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R போன்ற பைக்குகளுக்குச் சவால் விடும் என்று எதிர்பார்க்கலாம்.
புவி வெப்பத்தைக் குறைக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய ஐடியா!