ஹீரோ நிறுவனம் ஜனவரியில் 1,494 மின்சார இருசக்கர வாகன விற்பனையுடன் இந்த ஆண்டைத் தொடங்கியது. இருப்பினும், பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை உயர்ந்து 1,750 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டரான Vida V1 Plus எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.1.15 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில், அறிமுகப்படுத்தி இருக்கிறது. மானியத்துடன் ஒரு போர்ட்டபிள் சார்ஜரும் வழங்கப்படுகிறது.
மாநில அரசு மானியங்களால் விலை மேலும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, டெல்லியில் இதன் விலை ரூ.97,800 ஆக இருக்கும். பிரீமியம் மாடலான Vida V1 Pro விலையுடன் ஒப்பிடும்போது, ஸ்கூட்டரின் விலை ரூ.30,000 குறைகிறது.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் V1 ப்ரோவின் 3.94 kWh மாடலுடன் ஒப்பிடும்போது சற்று சிறிய 3.44 kWh பேட்டரியைக் கொண்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ ரேஞ்ச் கிடைக்கும் என்பதால் நகர எல்லைக்குள் தினசரி பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
V1 பிளஸ் மற்றும் V1 ப்ரோ இரண்டும் ஒரே 6 kW மின்சார மோட்டாரைக் கொண்டுள்ளன. இரண்டும் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை. கூடுதலாக, முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், எல்இடி விளக்குகள், பல ரைடிங் மோட் மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு உள்ளிட்ட அம்சங்களும் இருக்கின்றன.
ஹீரோ நிறுவனம் ஜனவரியில் 1,494 மின்சார இருசக்கர வாகன விற்பனையுடன் இந்த ஆண்டைத் தொடங்கியது. முந்தைய ஆண்டு விற்பனையான யூனிட்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 6.46 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும், பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை உயர்ந்து 1,750 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.
ஆரம்ப தடுமாற்றத்துக்குப் பிறகு ஜூலை 2023 முதல் ஹீரோ விடாவின் விற்பனை குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டது. செப்டம்பர் 2023 இல் இந்த மின்சார ஸ்கூட்டர் விற்பனை முதன்முறையாக 3,000 யூனிட்களைத் தாண்டியது. Vida V1 Plus மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்க முன்வந்துள்ளது.