ஏ.எம்.டி. டிரான்ஸ்மிஷனுடன் இந்தியாவின் முதல் சி.என்.ஜி. கார் இதுதான்! எப்படி இருக்கு பாருங்க!

By SG Balan  |  First Published Feb 10, 2024, 9:43 AM IST

டாடா டியாகோ, டாடா டிகோர் கார்கள் 1.2-லிட்டர் எஞ்சின் மூலம் கொண்டவையாக உள்ளன. இரண்டு கார்களிலும் சிறப்பு அம்சம் ஏஎம்டி (AMT) டிரான்ஸ்மிஷன் தான்.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ சிஎன்ஜி ஏஎம்டி (Tiago CNG AMT) மற்றும் டிகோர் சிஎன்ஜி ஏஎம்டி (Tigor CNG AMT) என இரண்டு புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இவை இரண்டும் இந்தியாவில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) கொண்ட முதல் சிஎன்ஜி (CNG) கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டியாகோ மற்றும் டிகோர் இரண்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார்கள்தான். ஆனால் அவற்றை மேம்படுத்தி ஏ.எம்.டி. டிராஸ்மிஷனுடன் கூடிய சி.என்.ஜி. கார்களாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது டாடா நிறுவனம்.

Tap to resize

Latest Videos

டாடா டியாகோ, டாடா டிகோர் கார்கள் 1.2-லிட்டர் எஞ்சின் மூலம் கொண்டவையாக உள்ளன. பெட்ரோல் மூலம் போது 85bhp மற்றும் 113Nm டார்க் கொடுக்கிறது. சிஎன்ஜி (CNG) முறையில் சற்று குறைவான டார்க் கொண்டிருக்கும். இருந்தாலும், இரண்டு கார்களிலும் சிறப்பு அம்சம் ஏஎம்டி (AMT) டிரான்ஸ்மிஷன் தான்.

ரூ.50,000 கம்மியாக கிடைக்கும் ஹூண்டாய் கார்! இந்த ஆஃபர் இன்னும் கொஞ்ச நாள் தான்... ஓடுங்க...

டியாகோ மற்றும் டிகோர் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைப் பயன்படுத்துகின்றன. இது பெட்ரோல் பயன்முறையில் 86PS மற்றும் 113Nm மற்றும் CNG பயன்முறையில் 73.4PS மற்றும் 95Nm ஆகியவற்றை உருவாக்குகிறது.

டாடா டியாகோ கார் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கின்றன. XTA – ரூ 7,89,900, XZA+ – ரூ 8,79,900, XZA+ DT – ரூ 8,89,900, XZA NRG – ரூ 8,79,900 எக்ஸ் ஷோரூம் விலையில் விற்கப்படுகின்றன. டாடா டிகோர் கார் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். XZA – ரூ 8,84,900 மற்றும் XZA+ – ரூ 9,54,900 எக்ஸ்-ஷோரூம் விலை விற்பனைக்கு உள்ளன.

இந்த இரண்டு கார்களைத் தவிர டாடா டியாகோ என்.ஆர்.ஜி. ஏ.எம்.டி. மாடலையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தக் காரின் ஆரம்ப விலை ரூ.8.25 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே சார்ஜில் 110 கி.மீ. போகலாம்... விலையும் ரொம்ப கம்மி... கலக்கும் கைனடிக் லூனா!

click me!